
கல் உப்பை வெயிலில் காயவைத்து எடுத்து பயன்படுத்துவதன் மூலம் வைட்டமின் டி சத்து நம் உடலுக்கு கிடைக்கும் என்று கூறுகிறார்கள். இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பதை பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
சூரிய ஒளியில் இருந்து எலும்பிற்கு தேவையான வைட்டமின் டி நேரடியாக கிடைக்கிறது. அது தண்ணீரிலோ, உப்பிலோ அல்லது உணவுப்பொருளிலோ உறிஞ்சிக் கொள்ளப்படும். அதை சாப்பிட்டால் நமக்கு நேரடியாக வைட்டமின் டி கிடைத்துவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை.
வைட்டமின் டி கொலஸ்ட்ராலில் இருந்து உருவாகக்கூடிய பொருளாகும். சூரியனில் இருந்து வரும் UVB புற ஊதாக் கதிர்கள் நம் சருமத்தில் படும்போது நம்முடைய சருமத்தின் மேல் பகுதியான Epidermisல் இருக்கும் பிளாஸ்மா மெம்பரேனில் dehydrocholesterol அதில் புறஊதாக்கதிர்கள் படும்போது அதை Photons உறிஞ்சிக் கொள்ளும்.
அதிலிருந்து Previtamin D ஆக மாறி ரத்தத்தில் கலந்து கல்லீரலுக்கு சென்று 25 hydroxy vitamin D ஆக மாறும். பிறகு கிட்னிக்கு சென்று ஆக்டிவ் வைட்டமின் D3 ஆக மாறும். அதுதான் கேல்சியம் நம் வயிற்றில் ஊறிஞ்சிக்கொள்ளவும், அதிகமாக கிட்னியில் வெளியேறாமல் இருக்கவும், எலும்புகளில் கேல்சியம் படிவதற்கும் உதவுகிறது.
ஆகவே, நேரடியாக வைட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து கிடைப்பதில்லை. வைட்டமின் டியை உருவாக்குவது நம் உடலில் உள்ள செல்கள் தான். சூரிய வெளிச்சத்தின் உதவியுடன் நம் உடல் தான் வைட்டமின் டியை உற்பத்தி செய்கிறது. மதியம் 11 மணி முதல் 3 மணி வரை UVB rays கிடைக்கும் சரியான நேரமாகும்.
15 முதல் 20 நிமிடம் சூரிய ஒளி நம் மீது பட்டாலே ஒருநாளைக்கு தேவையான கேல்சியம் நம் உடலுக்கு கிடைக்கும். வைட்டமின் டி சத்து மாத்திரையை மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் வாங்கி சாப்பிடலாம். எனவே, நேரடியாக எந்த உணவுப்பொருளும் வைட்டமின் டியை உறிஞ்சி வைத்துக் கொள்ளாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
வைட்டமின் டி நம் உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பேட்டை சீராக்க உதவுகிறது. வைட்டமின் டி நம் எலும்புகளையும், பற்களையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மீன், முட்டை போன்ற உணவுகளில் வைட்டமின் டி கிடைக்கும். உப்பை சூரிய ஒளியில் காய வைப்பபன் மூலம் அதில் இருக்கும் ஐயோடின் Deactivate ஆகிவிடும். இதனால் தைராய்ட் பிரச்னைகள் வரும் வாய்ப்புகள் உள்ளன.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)