இதயத்திற்கு இதம் தரும் தட்டைப்பயிறின் நன்மைகள்!

Karamani
Karamanihttps://tamil.latestly.com

மது உடலுக்கு பருப்பு வகைகளும், பயறு வகைகளும் மிகவும் நன்மை பயக்கும் உணவுப் பொருட்களாகும். காராமணி என்று அழைக்கப்படும் தட்டைப் பயிறு பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு மிகவும் ஏற்றது. குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது. அதனால் உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்ளும். உடல் பருமன் மிக்கவர்கள் இதை அடிக்கடி எடுத்துக் கொண்டால் உடல் எடை குறையும்.

இதில் வைட்டமின் சி, ஏ, பி, போலிக் ஆசிட், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், சோடியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், தயாமின் போன்ற பல்வேறு வைட்டமின்கள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்திகளை கொண்டதால் உடல் ஆரோக்கியமாக விளங்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது தட்டைப்பயிறு. இரத்தத்தில் சர்க்கரை அளவுகளை மிகவும் சீராக வைத்துக் கொள்ளும்.

இதயத்திற்கு இதமானது தட்டைப் பயிறு. இதில் குறைந்த அளவு கிளைசெமிக் இன்டெக்ஸ் உள்ளது. அதனால் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்கும். எனவே, இதயம் ஆரோக்கியமாக செயல்படும். புரதச்சத்து மிக்க தட்டைப்பயிறு உடலின் திசுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் ஒட்டுமொத்த உடல் செயல்பாட்டிற்கும் உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
சனிக்கிழமைகளில் வாங்கக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா?
Karamani

தொடர்ந்து தட்டைப்பயிறை உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும். முடி உதிர்வையும் குறைக்கும். இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் ஆன்டி ஆக்சிடென்ட் குணங்கள் நிறைந்தது. இதனால் இயக்க உறுப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து சரும அணுக்களை பாதுகாக்கின்றன. பளபளப்பான சருமம் கிடைக்கும்.

இத்தனை நன்மைகள் நிறைந்த தட்டைப் பயிறை வாரத்தில் இரண்டு நாட்களாவது எடுத்துக் கொள்வது உடல் நலத்துக்கு ஆரோக்கியமாகும்.

தட்டைப் பயிறை மசாலா அரைத்து குழம்பாக செய்து உண்ணலாம். முளைகட்டி பச்சையாக உண்ணலாம். மேலும், முளைகட்டிய தட்டை பயிறு குழம்பும் செய்யலாம். அடை செய்யும்போது பிற பருப்புகளுடன் தட்டைபயறையும் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். மோர் குழம்பு, பருப்பு உருண்டை குழம்பும் செய்யலாம். அவியல் செய்தும் சாப்பிடலாம். துவையல் அரைத்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். கல்யாண வீடுகளில் சாம்பார், ரசம் மற்றும் நவராத்திரி சமயங்களில் சுண்டல் போன்ற உணவுகளில் தட்டைப்பயிறு பயன்படுத்தப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com