ஒல்லிக்குச்சி உடம்பு வேண்டுமா? அப்போ இருக்கே நம்ம காசினிக் கீரை! 

காசினி கீரை
காசினி கீரை
Published on

பொதுவாகவே கீரைகள் என்றாலே அதில் மருத்துவப் பயன்கள் அதிகம் இருக்கும். ஆனால் காசினி என்ற ஒரு வகை கீரையில், நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு அதிகப்படியான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கு உகந்த சிறந்த கீரையாக இது பார்க்கப்படுகிறது. 

காசினிக் கீரை பார்ப்பதற்கு முள்ளங்கிக் கீரையைப் போலவே இருக்கும். இதன் வேர்களைக் கூட நாம் சமைத்து சாப்பிடலாம். இந்தக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், தாதுக்கள், இரும்புச்சத்து, விட்டமின் ஏ, பி, சி போன்ற அனைத்துமே உள்ளது. எனவே இந்த பதிவில் இந்த கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

1. தேவையற்ற நீரை வெளியேற்றும்: நமது உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றுவதற்கு காசினிக் கீரை பெரிதும் உதவுகிறது. காசினிக் கீரையை காய வைத்து பொடி செய்து இரவு நேரங்களில் வெந்நீர் அல்லது பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட நீர் அனைத்தையும் வெளியேற்றிவிடும். 

2. உடல் எடையைக் குறைக்க உதவும்: இந்தக் கீரையில் உடல் எடையை குறைக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக இதை எவ்வளவு சாப்பிட்டாலும் அதிக கலோரிகள் உங்களுக்கு கிடைக்காது என்பதால், டயட் இருப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். 

3. சர்க்கரை நோயாளிகளின் அருமருந்து: சர்க்கரை நோயாளிகளுக்கு சில சமயங்களில் காலில் புண்கள் ஏற்பட்டால் இந்தக் கீரையை அரைத்து புண்களின் மீது வைத்து கட்டினால் அவை விரைவில் ஆறிவிடும். உடலில் எங்காவது வீக்கம் இருந்தால் அவற்றை குணப்படுத்தும் ஆற்றல் காசனிக் கீரைக்கு உண்டு. இந்த கீரையின் சாற்றை புண்களில் தடவினாலே ஆறிவிடும். 

4. உடல் உள்ளுறுப்புகளுக்கு நல்லது: உடல் உள்ளுறுப்புகளான இதயம், சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்யும் தன்மை காசினிக் கீரையில் உள்ளது. இது உடலில் படிந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கி இதயத்தை பாதுகாக்க உதவும். காசினிக் கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து வருபவர்களுக்கு சிறுநீரக கற்கள் உண்டாகாது. 

இதையும் படியுங்கள்:
கொரிய பாரம்பரிய உணவான கிமிச்சியை இந்திய முறையில் செய்யலாம் வாங்க!!
காசினி கீரை

5. பெண்களுக்கு நல்லது: காசினிக்கீரை பெண்களின் வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக அதிக வெள்ளைப்படுதல் மற்றும் உதிரந்போக்கு பிரச்சினையில் அவதிப்படும் பெண்கள் காசினிக் கீரையை உணவில் சேர்க்க வேண்டும். அல்லது காசினிக் கீரையை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டாலும் விரைவில் நிவாரணம் கிடைக்கும். 

காசினிக் கீரைக்கு உடலில் உள்ள எல்லா நோய்களையும் நீக்கும் அற்புத ஆற்றல் இருப்பதால், இதை ‘கடவுளின் கீரை’ என்றும் ‘கடவுளின் வரம்’ என்றும் அழைக்கிறார்கள். எனவே இவ்வளவு அற்புத ஆற்றல்களைக் கொண்ட காசினிக் கீரையை அனைவரும் உங்களது உணவில் சேர்த்துக்கொண்டு ஆரோக்கியமாக இருங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com