கடுகு சிறுத்தாலும் ஆரோக்கியம் குறையாது!

கடுகு
Mustard
Published on

டுகு செடி ஒரு மீட்டர் உயரம் வரை வளரும் தாவரமாகும். இதன் பூவிலிருந்து தோன்றும் விதைகள்தான் கடுகு. இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள செலினியம், மாங்கனீசு, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், பாஸ்பரஸ், தாமிரம் மற்றும் ஆற்றல்மிக்க வைட்டமின்களும் உள்ளன. கடுகில் உள்ள கந்தகம் உணவுக்கு மனத்தையும், உடலுக்கு பலத்தையும் தருகிறது.

கடுகில், ‘டோகோபெரல்ஸ்’ எனும் பொருள் உள்ளது. இதுதான் கடுகின் எண்ணெய் தன்மையை பாதுகாக்கிறது. கடுகு சருமத்தின் பொலிவை மேம்படுத்துவதோடு, வயிற்றிற்கு இதம் தருகிறது. பெண்களின் மாதவிலக்கு தூண்டுதலை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. சளியை விரட்டும் தன்மையும் அதற்கு உண்டு.

உடலுக்கு தேவையான வெப்பத்தை தந்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், இரத்தத்தை சுத்தப்படுத்தும். கடுகை பொரிக்கும்போது கொழுப்பு அமிலங்கள் வெடித்து வெளியேறி ஜீரணத்திற்கு துணை புரிகிறது. இருமல், வாந்தி, தலைபாரம், தலைசுற்றல் பாதிப்பு குணமாக, ஒரு தேக்கரண்டி கடுகு பொடியை தேனில் கலந்து சாப்பிட சரியாகும். ஆஸ்துமா தொந்தரவு மற்றும் மூக்கில் நீர் வடிதல் கட்டுப்படும். கடுகு தேவையற்ற பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளை அழிக்கும் திறன் கொண்டது.

கடுகு கசப்பு மற்றும் காரத்தன்மை இரண்டுமே கொண்டது. கடுகில் கருங்கடுகு, செங்கடுகு, வெண்கடுகு, மஞ்சள் கடுகு இப்படிப் பல வகைகள் இருந்தாலும் நாம் சமையலுக்குப் பயன்படுத்துவது இந்த கருங்கடுகுதான். அமெரிக்காவில் மஞ்சள் கடுகை பயன்படுத்துவார்களாம். ஆனால், நம்முடைய செங்கடுகில்தான் நிறைய மருத்துவ குணம் நிரம்பி உள்ளது.

காலையில் ஒரு சிட்டிகை கடுகு, ஒன்றிரண்டு கல் உப்பு, ஐந்து மிளகு சேர்த்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் விஷக்கடியால் உடலில் ஏற்படும் ஒவ்வாமை, சரும நோய்கள் நீங்கும். ஜீரணம் தூண்டப்பட்டு உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறும்.

கடுகை உணவில் சேர்த்துக்கொள்வதால் செரிமானம் அதிகமாகிறது. வயிற்றிலுள்ள பூச்சிகளை அழிக்கக்கூடியது. இதயத்திற்கு நலன் தரக்கூடியது. பொதுவாக, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மீன் எண்ணெயில் அதிகமாக உள்ள நிலையில், தாவரப் பொருட்களில் கடுகில் இந்த கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளதாம். அதனால்தான், இதயத்திற்கு கடுகு நல்லது என்கிறார்கள். கடுகு எண்ணெயை பயன்படுத்தினால், இதயத்துக்கு மிகவும் நல்லது. நரம்பு சார்ந்த வலிகள், வீக்கங்கள் இருந்தால் அதற்கு நிவாரணமாக இருப்பது இந்த கடுகு எண்ணெய்தான்.

மார்பகம், நுரையீரல், பெருங்குடல் ஆகிய பகுதிகளில் புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. கடுகை உணவில் பயன்படுத்தினால், கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்துவதுடன், உடல் எடை குறைக்கவும் உதவுகிறது. கோடைக் காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகள் வந்துவிட்டால், அதற்கு கடுகை அரைத்துப் பூசுவார்கள்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் விருந்தா? அவசியம் கவனிக்க வேண்டிய 15 விஷயங்கள்!
கடுகு

கடுகு இருமலை கட்டுப்படுத்தக்கூடியது. ஒற்றை தலைவலியை போக்கக்கூடியது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடியது. மாதவிலக்கு பிரச்னையை தீர்க்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், கழிவுகளை எளிதாக வெளியேற்ற உதவுகிறது. இதிலுள்ள கால்சியம், எலும்புகளுக்கும் பற்களுக்கும் உறுதி தரக்கூடியது. நகங்கள், தலைமுடிக்கு வலிமை தருகிறது. சருமத்திற்கு பாதுகாப்பு தருகிறது.. குறிப்பாக, முதுமையை சற்று தள்ளிப்போட்டு, இளமையை தக்க வைக்கிற சக்தி கடுகுக்கு உண்டு. கூந்தலுக்கு நன்மை பயக்கும் ஒலிக் அமிலம் மற்றும் லினோலிக் அமிலம் இதில் உள்ளது. இவை முடி வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது முடிக்கு ஊட்டமளிப்பதோடு, குளிர்காலத்தில் முடி உதிர்வு அபாயத்தை குறைக்கிறது.

குளிர்காலத்தில் குளிரால் அவதிப்படுகிறீர்களா? கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால உடல் கதகதப்பாக இருக்கும். மிக முக்கியமாக, இது தசைகளை பலப்படுத்துகிறது. குளிர்காலத்தில் பலர் மூட்டு வலியால் பாதிக்கப்படுகின்றனர். வலியும் அதிகரிக்கலாம். இந்த வலிக்கு கடுகு எண்ணெய் மசாஜ் செய்வதன் மூலம் நிவாரணம் பெறலாம். கடுகில் உள்ள மெக்னீசியம் ஆஸ்துமா கோளாறுகளை நீக்குகிறது. இதற்கான காரணம் இதில் இருக்கும் என்சைம்கள்தான். வயிற்றில் புண் இருப்பவர்கள் கடுகை தவறாமல் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண்ணை விரைவில் குணப்படுதலாம். இதில் நிறைந்துள்ள ஆன்டி அல்சர்தான் இதற்கான காரணம். புற்று நோய் செல்கள் வளர்வதை இது ஆரம்பத்தில் இருந்தே தடுத்து விடும்.

கடுகு பயன்பாட்டை தீவிர ஆஸ்துமா மற்றும் தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். கடுகில் இத்தனை நன்மைகள் இருந்தாலும், கடுகை குறைந்த அளவுக்கே பயன்படுத்த வேண்டும். அதிகமாக எடுத்துக்கொண்டால், குமட்டல், வாந்தி போன்ற உபாதைகள் ஏற்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com