போர் வீரர்களும் குத்துச்சண்டை வீரர்களும் சாப்பிட்ட கல்லுண்டை சம்பா...

தமிழகத்தின் பாரம்பரிய அரிசி வகைகளுள் ஒன்றான கல்லுண்டை சம்பா அரிசியில் நிறைந்துள்ள சத்துக்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க..
Kallundai Samba Rice
Kallundai Samba Rice
Published on

கல்லுண்டை சம்பா அரிசி என்பது தமிழகத்தின் பாரம்பரிய அரிசி வகைகளுள் ஒன்று. இது பண்டைய மன்னர்களின் போர் வீரர்கள் மற்றும் குத்துச்சண்டை வீரர்களுக்கு உணவாக வழங்கப்பட்டது.

இந்த அரிசியில் நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகின்றன.

கல்லுண்டை சம்பா அரிசியில் சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்டால் தசை பலம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இந்த அரிசியை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது என்று நம்பப்படுகிறது.

ஏற்கனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அரிசியை உட்கொள்வதன் மூலம் பக்கவாதத்தின் பாதிப்பு அளவை வெகுவாகக் குறைக்க முடியும்.

இதில் நார்ச்சத்து மிகுந்து காணப்படுவதால், மலச்சிக்கலுக்கு இந்த அரிசி நல்லதொரு மருந்தாக செயல்படுகிறது.

கண் சம்பந்தமான நோய்களுக்கும் கல்லுண்டை சம்பா அரிசி நல்ல தீர்வைத் தரும்.

நீரிழிவு நோய், மூட்டு வலி, சரும நோய், வயிற்றுகோளாறு, வாயு தொல்லைகளை நீக்கும் சக்தி வாய்ந்தது இந்த அரிசி.

இந்த அரிசியில் கஞ்சி வைத்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு பேச்சு திறன் அதிகரிக்கும். திக்கு வாய் இருந்தாலும் குணமாகும்.

இதிலுள்ள பைட்டோ நியூட்ரியண்ட்ஸ் லிக்னான் மார்பக புற்றுநோய் மற்றும் இதயநோய் இரண்டையும் வராமல் காத்துக் கொள்ள உதவுகிறது.

இந்த அரிசி உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி, உடலின் எடையை கணிசமாக குறைக்க உதவுகிறது.

கல்லுண்டை சம்பா அரிசியில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதை சாப்பிடுபவர்களுக்கு உடலில் எலும்புகள், பற்கள் போன்றவை உறுதியாகிறது.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com