கீரைகளும் பயன்களும்!

கீரைகளும் பயன்களும்!

1. அகத்திக்கீரை: இரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும்.

2. வெள்ளை கரிசலை: இரத்த சோகையை நீக்கும்.

3. மஞ்சள் கரிசலை: கல்லீரலை பலமாக்கும், காமாலையை குணமாக்கும்.

4. காசினிக்கீரை: சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தைத் தணிக்கும்.

5. பசலைக்கீரை: தசைகளை பலமடையச் செய்யும்.

6. வெந்தயக்கீரை: மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும்.

7. தூதுவளை: சரும நோயை விலக்கும், சளித்தொல்லையை நீக்கும்.

8. குப்பைக் கீரை: பசியைத் தூண்டும்.

9. அரைக்கீரை: ஆண்மையைப் பெருக்கும்.

10. பொன்னாங்கன்னி கீரை: உடல் அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும்.

11. முருங்கைக்கீரை: நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம் பெறும்.

12. வல்லாரை கீரை: மூளைக்கு பலம் தரும்.

13. முடக்கத்தான் கீரை: கை, கால் முடக்கம் நீக்கும், வாயு பிரச்னையை தீர்க்கும்.

14. புதினாக்கீரை: இரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.

15. தும்பைகீரை: அசதி, சோம்பலை நீக்கும்.

16. புளிச்சகீரை: கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.

17. மணத்தக்காளி கீரை: வாய் மற்றும் வயிற்றுப்புண்ணை குணமாக்கும், தேமல் போக்கும்.

18. முள்ளங்கிக்கீரை: நீரடைப்பு நீக்கும்.

19. பருப்புக்கீரை: பித்தத்தை விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.

20. முளைக்கீரை: பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.

21. சக்கரவர்த்தி கீரை: தாது விருத்தியாகும்.

22. தவசிக்கீரை: இருமலைப் போக்கும்.

23. துத்திக்கீரை: வாய், வயிற்றுப் புண்ணை அகற்றும், மூலம் விலக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com