சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!

Foods to avoid for people with kidney problems!
Foods to avoid for people with kidney problems!

சிறுநீரகம் உடலில் முக்கிய உறுப்பாகும். இது திரவத்தை சமநிலைப்படுத்துதல், கழிவுகளை நீக்குதல், இரத்தத்தை வடிகட்டுதல், ஹார்மோன் உற்பத்தி செய்தல் போன்ற பல செயல்களுக்கு உதவுகிறது. சிறுநீரக பாதிப்பு ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும், பொதுவான காரணமாக இருப்பவை இரத்த அழுத்தம், இதய நோய், நீரிழிவு, குடிப்பழக்கம் போன்றவை ஆகும். சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்றால் உடலில் அதிக நீர் சேர்ந்து இரத்தத்தில் கழிவுகள் கலந்து பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் சில உணவுகளைத் தவிர்ப்பதன் மூலமாக அதன் செயல்பாட்டை மேம்படுத்த முடியும்.

பால் பொருட்கள்: பொதுவாகவே பால் பொருட்களில் அதிக அளவு பாஸ்பரஸ், புரதம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இவை சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு ஒத்துவராத விஷயங்களாகும். இதில் கால்சியம் அதிகம் இருந்தாலும், அதில் உள்ள பாஸ்பரஸ் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களின் எலும்புகளை சேதப்படுத்தும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்: நீண்ட நாட்கள் கேனில் அடைக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட உணவுகள் பொதுவாகவே அனைவரது ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிப்பவை. பெரும்பாலும் இவை குறைந்த விலையிலும் எளிதாகவும் கிடைப்பதால் மக்கள் இவற்றை விரும்பி வாங்குகிறார்கள். இப்படி பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம் அளவு அதிகம் உள்ளது. இதன் காரணமாக சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

சோடா பானங்கள்: சோடாவில் அதிகப்படியான சர்க்கரை மற்றும் கலோரியைத் தவிர பொட்டாசியமும் உள்ளது. இது குளிர்பானங்களில் சுவையை கூட்டுவதற்காக சேர்க்கப்படுகிறது. உடல் இந்த பாஸ்பரஸை உறிஞ்சும்போது சிறுநீரகத்திற்கு கூடுதல் சேதத்தை ஏற்படுத்தும்.

முழு கோதுமை: என்னதான் முழு கோதுமையில் செய்யப்பட்ட ரொட்டிகள் சராசரி நபர்களுக்கு ஆரோக்கியமான உணவு என்றாலும், இதில் அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால், சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளவர்கள் இதை எடுத்துக் கொள்ளக்கூடாது. இதனால் சிறுநீரகத்திற்கு வேலை அழுத்தம் கூடுகிறது.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கிய நன்மை தரும் ஏழு தாவர இலைகளும் அவற்றின் பயன்களும்!
Foods to avoid for people with kidney problems!

வெண்ணெய் பழம்: அவகாடோ பழத்தில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, நல்ல கொழுப்புகள் போன்ற எல்லா விதமான ஊட்டச்சத்துகளும் உள்ளன. என்னதான் இது ஆரோக்கியமான உணவாக இருந்தாலும், இதிலும் அதிகப்படியான பொட்டாசியம் சத்து இருப்பதால் சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் இதைத் தவிர்க்க வேண்டும்.

ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் என்ன உணவு உட்கொள்கிறார்கள் என்பதில் கவனமாக இருத்தல் வேண்டும். விரும்பியதெல்லாம் சாப்பிடக்கூடாது. மருத்துவரின் பரிந்துரையின் பேரில் என்ன உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டுமோ அவற்றை மட்டுமே சரியான முறையில் எடுத்துக் கொண்டால் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தைக் காக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com