சிறுநீரகத்தில் கல் இருந்தால், இந்த 5 உணவுகளை சாப்பிடாதீங்க ப்ளீஸ்! 

Kidney Stone.
Kidney Stone.

கிட்னியில் ரத்த சுத்திகரிப்பு நடக்கும்போது, சோடியம், கால்சியம் போன்ற தாதுக்கள் படிந்து கல்லாக உருவாகிறது. இது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, சிறுநீர் பாதையில் வந்து அடைத்துக் கொள்ளும் ஆபத்து உள்ளது.‌ இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம். சிறுநீரக கல் பாதிப்பு உள்ளவர்கள் தங்களின் உணவுப் பழக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். குறிப்பாக இந்த பதிவில் சொல்லப் போகும் 5 உணவுகள், கிட்னி கல் பிரச்சனையை அதிகரிக்கும் என்பதால் இவற்றைத் தவிர்ப்பது நல்லது. 

  1. அதிக உப்பு நிறைந்த உணவுகள்: சிறுநீரகக் கல் பாதிப்பு இருப்பவர்கள் அதிக உப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. அதேபோல அதிக மசாலாக்களையும் உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. அதிக சோடியம் சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், இவற்றைத் தவிர்ப்பது உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

  2. விட்டமின் சி நிறைந்த உணவுகள்: விட்டமின் சி நிறைந்த உணவுகள் சிறுநீரகத்திற்கு அதிக அழுத்தம் கொடுக்கும் என்பதால், அவற்றை உணவில் இருந்து விலக்க வேண்டியது அவசியம். விட்டமின் சி சத்து சிறுநீரகக் கல் பாதிப்பை மேலும் அதிகரிக்கும் தன்மை கொண்டது. எனவே எலுமிச்சை, ஆரஞ்சு, கொய்யா போன்றவற்றை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளுங்கள். 

  3. சோயா: என்னதான் சோயாவில் உடலுக்குத் தேவையான புரதம் அதிகமாக உள்ளதென்றாலும், சில சோயா தயாரிப்புகளில் ஆக்சிலேட் அதிக அளவில் இருக்கும். இது சிறுநீரகக் கற்களை உருவாக்கும் என்பதால், சோயா பொருட்களைத் தவிருங்கள்.

  4. தானியங்கள்: சிறுநீரகக் கல் பாதிப்பு உள்ளவர்கள் முழு தானியங்களை குறைவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக சோளம், கேழ்வரகு, கம்பு, மக்காச்சோளம் போன்ற தானியங்களில் கிளைசெமிக் குறியீடு குறைவாக இருந்தாலும், செரிமான நேரம் அதிகம் எடுக்கும். இது கிட்னிக்கு அதிக அழுத்தத்தைக் கொடுத்து அதன் பாதிப்பை தீவிரமாக்கலாம். 

  5. அசைவம்: அதிகம் புரதச்சத்து நிறைந்த மீன், இறைச்சி மற்றும் முட்டைகளை எடுத்துக் கொள்வதால் சிறுநீரகக் கல்லின் தீவிரம் அதிகமாகிறது. இது சிறுநீரக நோயாளிகளுக்கு எதிர்மறை விளைவை ஏற்படுத்தி பிரச்சனையை அதிகரிக்க வழிவகுக்கு. 

இதையும் படியுங்கள்:
சிறுநீரக பாதிப்பின் 7 அறிகுறிகள்! 
Kidney Stone.

எனவே சிறுநீரகக் கல் பாதிப்பு உள்ளவர்கள் தங்களுடைய உணவு முறையில் சில கட்டுப்பாடுகளை கட்டாயம் கொண்டு வர வேண்டும். கிட்னி உடலில் உள்ள மிக முக்கிய பாகம் என்பதால், எதையும் அலட்சியமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். எனவே முறையான உணவு கட்டுப்பாடு மூலமாக, கிட்னி கல் பிரச்சினைகளில் இருந்து நீங்கள் விடுபட முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com