மூலிகைகளின் மன்னன் திருநீற்றுப் பச்சிலை!

King of Herbs thiruneetru pachilai
King of Herbs thiruneetru pachilai

தொட்டாலே மணக்கும் திருநீற்றுப் பச்சிலை பல நோய்களையும் குணப்படுத்தும் மா மருந்தாகவும் பயன்படுகிறது. இது உத்திரசடை, பச்சை, விபூதிபச்சிலை, சப்ஜா, திருநீற்று பத்திரி என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சில கோயில்களில் திருநீற்று பச்சிலையை வளர்த்து வருகின்றனர்.

இதில் பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ, சத்துக்கள் உள்ளன. குறைந்த கலோரிகள் இருக்கும் இந்தப் பச்சிலையில் பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு போன்ற தாது உப்புக்கள் அதிகமாக இருக்கின்றன.

இந்தச் செடியின் வேரை இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை அருந்தி வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து வயிற்று புண்களை ஆற்றும்.

சிறுநீரை பெருக்கி ரத்தத்தைச் சுத்தப் படுத்துவதுடன் உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி நீர் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து காப்பாற்றும் காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்னைகளுக்கு இலைச்சாறு சில சொட்டுகள் விட்டால் குணம் கிடைக்கும்.

பச்சிலையுடன் வசம்பு சேர்த்து அரைத்து முகப்பருக்களில் பூசினால் பருக்கள் காணாமல் போய்விடும்.

இந்த பச்சிலையின் சாறெடுத்து சுடுநீரில் கலந்து குடித்தால் வாந்தி கபநோய்கள் குணமாவதாக அகத்திய முனிவர் கூறியிருக்கிறார்.

கர்ப்பிணிப் பெண்கள் பச்சிலை சாறு குடித்தால் பிரசவத்தின்போது ஏற்படக்கூடியக் கடுமையான வலிகள் குறையும்.

பச்சிலை விதைகளை கஷாயம் செய்து குடித்து வந்தால் சுறுசுறுப்பு கிடைப்பதோடு மூத்திர கோளாறுகள் சரியாகும்.

இந்த சப்ஜா விதைகளில் செய்த சர்பத்தை குடித்து வந்தால் சீதபேதி, வெள்ளை படுதல், வெட்டைச்சூடு, இருமல் சரியாகும்.

காய்ச்சல் தீவிரமாக இருக்கும்போது இந்த முழுச் செடியையும் சுத்தம் செய்து நன்றாக கொதிக்கவைத்து குடித்துவந்தால் உடலில் இருக்கும் வியர்வை வெளியேறி உடலிற்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது.

இதன் விதைகளை இரண்டு மணி நேரம் நீரில் ஊற வைத்து பிறகு வெதுவெதுப்பான நீர் சேர்த்து பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் குறைவதோடு மல சிக்கல் இல்லாமல் நெகிழ்வாக வைத்திருக்கும்.

குளிக்கும் நீரில் அரைமணி நேரத்துக்கு முன்பு ஒரு கைப்பிடி இலைகளை எடுத்து நீரில் நனைத்து குளித்து வந்தால் உடலை நறுமணமாகவும், தூய்மையாகவும் வைத்திருக்கும்.

இலையைப் பறித்து உள்ளங்கையில் வைத்து நன்றாக கசக்கி எடுத்து இலேசாக முகர்ந்து பார்த்தால் தலைவலி மறையும். மூக்கு கோளாறுகள் சரியாகும். தூக்கமின்மை பிரச்னை குறையும்.

விஷ ஜந்துக்கள் ஏதேனும் கடித்தால் அந்த இடத்தில் இந்தப் பச்சிலை சாறை சருமத்தில் பயன்படுத்தினால் விஷம் குறைந்துவிடும்.

இந்தச் சாற்றை உடலில் பூசிக்கொண்டால் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம்.

இந்தச் சாற்றில் இருந்து எடுக்கப்படும் வேதிப்பொருள் வாத நோயைத் தடுக்கிறது. மேலும், புற்று நோய் செல்கள் வேகமாக பரவுவதைத் தடுக்கிறது.

பச்சிலையை எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் பேன், பொடுகு எல்லாம் மறைந்துவிடும்.

அனைவரும் இந்தச் செடியை நட்டு சுற்றுப்புறத்தை நறுமணமுள்ளதாகவும், ஆரோக்கியமாகவும் வைத்து, உடல் நலமும் பேணுவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com