மாம்பழம், தர்பூசணியை விடுங்க... இந்த 10 சம்மர் பழங்களை ட்ரை பண்ணி இருக்கீங்களா?

Summer Fruits
Summer Fruits
Published on
Summer Fruits
Summer Fruits

வெயில் காலம் வந்தாலே நமக்கு மாம்பழமும், தர்பூசணியும் தான் உடனே ஞாபகம் வரும். ஆனா, நாம பெருசா கண்டுக்காத நிறைய சூப்பரான பழங்கள் இருக்கு. வெயிலோட உஷ்ணத்தை குறைக்குற அந்த ஸ்பெஷல் 10 பழங்கள் என்ன, அத எப்படி சாப்பிடணும்னு பார்க்கலாம் வாங்க.

Water Apple
Water Apple

1. பன்னீர் பழம் (Water Apple): பார்க்க குட்டி ஆப்பிள் மாதிரி, ரோஸ் கலர்ல இருக்கும். இத அப்படியே கடிச்சு சாப்பிடலாம். லைட்டான இனிப்பும், நிறைய தண்ணிச்சத்தும் கலந்து தாகத்தை உடனே தீர்க்கும்.

Manila Tamarind
Manila Tamarind

2. கொடுக்காப்புளி (Manila Tamarind): ஸ்கூல் படிக்கும்போது வாசல்ல வித்துட்டு இருப்பாங்க, ஞாபகம் இருக்கா? சுருள் சுருளா இருக்கும். உள்ள இருக்குற கருப்பு விதையை துப்பிட்டு, மேல இருக்குற சதையை மட்டும் சாப்பிடணும். இனிப்பும் துவர்ப்பும் கலந்த செம டேஸ்ட்.

Wood Apple
Wood Apple

3. விளாம்பழம் (Wood Apple): வெளியே ஓடு ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும். அத உடைச்சு, உள்ள இருக்குற சதைல கொஞ்சம் வெல்லம் கலந்து பிசைஞ்சு சாப்பிட்டா... அமிர்தம் தான்!

Phalsa
Phalsa

4. ஃபால்சா (Phalsa): இது நம்ம ஊர் 'ப்ளூபெர்ரி'. பார்க்க குட்டி குட்டியா இருக்கும். இத அப்படியே சாப்பிடறத விட, லேசா மசிச்சு, ஜூஸ் போட்டு கொஞ்சம் உப்பு, சீரகத்தூள் சேர்த்து குடிச்சா வெயிலுக்கு அவ்ளோ இதமா இருக்கும்.

Karonda
Karonda

5. கிளாக்காய் (Karonda): வெள்ளையும், பிங்கும் கலந்த குட்டி பழம். கொஞ்சம் புளிக்கும். இத அப்படியே கல் உப்பு, மிளகாய்த்தூள் தொட்டு சாப்பிடலாம். இல்லனா ஊறுகாய் போட்டு வெச்சுக்கிட்டா தயிர் சாதத்துக்கு வேற லெவல் காம்போ.

Jujube
Jujube

6. இலந்தை பழம் (Jujube): கிராமத்துல இருக்குறவங்களுக்கு இது ஃபேவரைட். புளிப்பும் இனிப்பும் கலந்த சுவை. இத அப்படியே சாப்பிடலாம், இல்லனா காயவெச்சு, வெல்லம், மிளகாய் வெச்சு இடிச்சு 'இலந்தை வடை'யா செஞ்சு சாப்பிடலாம்.

Soursop
Soursop

7. முள் சீதா (Soursop): வெளியே முள் முள்ளா இருக்கும், ஆனா உள்ள பஞ்சு மாதிரி சதை. இத அப்படியே ஸ்பூன்ல எடுத்து சாப்பிடலாம், இல்லனா விதையை எடுத்துட்டு மில்க் ஷேக் மாதிரி செஞ்சு குடிக்கலாம். உடம்புக்கு அவ்ளோ நல்லது.

Mangosteen
Mangosteen

8. மங்குஸ்தான் (Mangosteen): மேல தடிமனான ஊதா கலர் தோல், உள்ள வெள்ளை சுளைகள். பார்க்க பூண்டு மாதிரி இருக்கும் ஆனா டேஸ்ட் செம இனிப்பு. மேல இருக்குற தோலை லேசா அழுத்தி உடைச்சு, உள்ள இருக்குற சுளைகளை அப்படியே உறிஞ்சி சாப்பிட வேண்டியதுதான்.

Bael
Bael

9. வில்வப் பழம் (Bael): சிவனுக்கு உகந்த வில்வ மரத்துல காய்க்கும் பழம் இது. கோடைக்காலத்துல வர வயிறு சம்பந்தப்பட்ட எல்லா பிரச்னைக்கும் இதுதான் பெஸ்ட். உள்ள இருக்குற சதையை தண்ணில கரைச்சு, பனங்கற்கண்டு சேர்த்து சர்பத் மாதிரி குடிக்கலாம்.

Toddy Palm Fruit
Toddy Palm Fruit

10. சுட்ட பனம்பழம் (Toddy Palm Fruit): நுங்கு எல்லாருக்கும் தெரியும், ஆனா பழுத்த பனம்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? பழுத்த பனம்பழத்த நெருப்புல வாட்டி, அதோட தோலை உரிச்சிட்டு உள்ள இருக்குற ஆரஞ்சு கலர் சதையை சாப்பிட்டா, அந்த வாசனையும் டேஸ்ட்டும் வாழ்நாள் முழுக்க மறக்காது.

Summer Fruits
Summer Fruits

சூப்பர் மார்க்கெட்ல கிடைக்கிற வெளிநாட்டுப் பழங்களை விட, நம்ம ஊரு சீதோஷ்ண நிலைக்கு ஏத்த மாதிரி இயற்கையா கிடைக்கிற இந்த பழங்கள்ல சத்து அதிகம், விலையும் கம்மி. இந்த சம்மருக்கு இதுல எதாவது ஒன்னு கிடைச்சாலும் மிஸ் பண்ணாம வாங்கி சாப்பிடுங்க.

variyaar
variyaar

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com