செய்வோம்; சாப்பிடுவோம்... சத்துகளையும் தெரிந்துகொள்வோம்!

உளுந்து தட்டை...
உளுந்து தட்டை...

ன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவை அளிப்பது பெற்றோருக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. பள்ளியில் இருந்து வரும் குழந்தைகள் மாலையில் உண்ண திண்பண்டங்களைக் கேட்கின்றனர். கடைகளில் விற்கும் திண்பண்டங்கள் எல்லாம் ரசாயனம் கலந்து இருக்கிறது. இப்படிப்பட்ட நச்சுத் தன்மையுள்ள திண்பண்டங்களைக் குழந்தை களுக்குக் கொடுக்காமல் வீட்டிலேயே எளிதாகவும், சத்து நிறைந்ததாகவும் திண்பண்டங்களைச் செய்து கொடுக்கலாம். சில எளிய திண்பண்டங்களின் செய்முறை பின்வருமாறு:

நந்தினி சுப்ரமணியம்...
நந்தினி சுப்ரமணியம்...

உளுந்து தட்டை;

தேவையான பொருட்கள்: தோலுடன் கூடிய கருப்பு உளுந்து – 1 தம்ளர், மிளகு - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், பெருங்காயம் - ¼ டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கருப்பு உளுந்தை தண்ணீரில் ஊறவைத்து, பிறகு அதனை நீர் விடாமல் கெட்டியாக அரைத்து பின்பு மிளகும் அதனுடன் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த இந்த மாவுடன் தேவையான அளவுள்ள சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து மெல்லியதாகத் தட்டி கடலை எண்ணெயில் பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பயன்கள்:

* மலம் கட்டிக்கொள்ளாமல் இலகுவாக வெளியேற வழிவகை செய்கிறது.

* கருப்பு உளுந்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் கருப்பு உளுந்தை கொண்டு செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ணக் கொடுப்பதால் ரத்த சோகை நோய் விரைவில் தீரும்.

* கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன.

* ஆர்த்திரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.

* கருப்பு உளுந்தில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் சத்துகள் நிறைந்துள்ள ஒரு உணவாக இருக்கிறது.

கார அடை:

தேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு -  50 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், துவரம் பருப்பு - 100 கிராம், இட்லி அரிசி - 100 கிராம், மிளகு – 20, சீரகம் - ½ டீஸ்பூன், சோம்பு - ½ டீஸ்பூன், பட்டை – 1 துண்டு. இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 10 பற்கள், பெருங்காயம் -  ஒரு புளியங்கொட்டை அளவு, தனியா – ½ டீஸ்பூன், வரமிளகாய் – 5, உப்பு, தேவையான அளவு.

செய்முறை: கடலை பருப்பு, பாசிப்பருப்பு, துவரம் பருப்பு, இட்லி அரிசி முதலியவைகளை ஊறவைத்து, கரகர பதத்துடன் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு மிளகு முதல் மற்ற சரக்குகளை வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அரைத்த மாவுடன் இந்த பொடிகளை சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து நீர் விட்டு கரைத்துக்கொள்ள வேண்டும். இதனை தோசை கல்லில் அடை போல் தட்டி சிறுதீ வைத்து நல்லெண்ணெய் சேர்த்து சிவக்க எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை அரைத்து உடனே பயன்படுத்தலாம். புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

இதையும் படியுங்கள்:
இந்தக் கலைக்கு இத்தனை சிறப்பா?
உளுந்து தட்டை...

பயன்கள்:

உடல் சூட்டை தணிக்க உதவுகிறது.

மூலநோய், மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தவும் உதவுகிறது.

இதில் இருக்கும் தாது உப்புகள் ரத்த சோகையை குணப்படுத்த உதவுகிறது.

புரதமானது செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. கடலை பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது.

கடலை பருப்பு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை சீக்கிரத்தில் கூடும்.

துவரையில் உள்ள வைட்டமின் சி சத்தானது, உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. இது ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, ஆன்டிஆக்ஸிஜன்டாக செயல்பட்டு உடல்நலத்தை மேம்படுத்துவதோடு நோய் எதிர்ப்பாற்றலையும் அதிகரிக்கிறது.

நம் முன்னோர்கள் சிறுதானியங்கள், கீரைகள், பருப்பு வகைகள் இவைகளைக் கொண்டு உணவு வகைகள், பண்டங்கள் செய்து கொடுத்து நலமுடன் வாழ்ந்து வந்தனர். ஆனால் நாமோ நாகரிகம் என்ற பெயரில் துரித உணவை கொடுத்து வருகிறோம். அதை ஆரோக்கியமான உணவு முறைக்கு மாற முயற்சி செய்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com