முடக்கு வாதம் பற்றி முழுமையாக அறிந்து கொள்வோம்!

Let's know about Rheumatoid Arthritis completely
Let's know about Rheumatoid Arthritis completelyhttps://www.updatenews360.com

முடக்கு வாதம் (Rheumatoid Arthritis) என்பது ஒரு தன்னுடல் தாக்க நோயாகும். இதில் நோயெதிர்ப்பு அமைப்பு உடலின் ஆரோக்கியமான செல்களைத் தாக்கத் தொடங்குகிறது. மற்றும் நாள்பட்ட மூட்டு அழற்சியை ஏற்படுத்துகிறது. முடக்கு வாதம், மணிக்கட்டு, கைகள் மற்றும் முழங்கால்கள் போன்ற மூட்டுகளை பாதிப்பதோடு, வலி வீக்கத்தையும் ஏற்படுத்துகிறது. குடும்ப வரலாறு, வயது, உடல் பருமன் , புகைபிடித்தல் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை ஆகியவற்றுடன் மரபணு காரணிகள் இந்த நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கின்றன. இந்த நோயை மருந்துகளின் உதவியுடன் கட்டுப்படுத்தலாம் மற்றும் மூட்டுகளின் சிதைவைத் தடுக்கலாம். உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது, ஆரோக்கியமான எடை பராமரித்தல், வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் முடக்குவாத நோயாளிகளின் வாழ்க்கையை சற்று சீர்படுத்தலாம்.

முடக்கு வாதத்தின் அறிகுறிகள்:

1. சோர்வு: இது ஒரு நபரின் அன்றாட வாழ்க்கையையும் செயல்பாடுகளையும் பாதிக்கிறது.

2. காய்ச்சல்: சோர்வைத் தொடர்ந்து காய்ச்சல் ஏற்படுகிறது. மேலும் உடல் சோர்வுக்கு ஆளாகிறது.

3. எடை இழப்பு: காய்ச்சல் மற்றும் சோர்வினால் பசியின்மை ஏற்பட்டு எடை இழப்பு மற்றும் உடல் பலவீனம் ஏற்படுகிறது.

4. வலி மற்றும் விறைப்பு தன்மை: முதலில் கை மற்றும் கால் விரல்களின் மூட்டுகளில் வலி மற்றும் விறைப்பு தோன்றுகிறது. இரவு தூங்கி எழுந்ததும் காலையில் இது தீவிரமாகிறது. இந்த அறிகுறிகளின் தீவிரம் காலப்போக்கில் அதிகரிக்கிறது.

5. வீக்கம்: கைகள் மற்றும் கால்கள் வீங்குவது முடக்கு வாதத்தின் பொதுவான அறிகுறிகளாகும். மூட்டுகளில் ஏற்படும் அழற்சியினால் மூட்டுகளில் அதிகப்படியான திரவம் உற்பத்தியாகிறது. இதனால் மூட்டுகளை சுற்றி உள்ள பகுதியில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் நரம்பு மற்றும் மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் அதிகமாகிறது.

முடக்குவாதத்திற்கான ஆபத்து காரணிகள்: முடக்கு வாதத்தின் சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை. இருப்பினும், அதன் ஆபத்தை அதிகரிக்கக்கூடிய சில காரணிகளை ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மனித உடலில் உள்ள நோயெதிர்ப்பு அமைப்பு ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்வதன் மூலம் உடலை நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இருப்பினும், சில நேரங்களில் ஆன்டிபாடிகள் மூட்டுகளை உள்ளடக்கிய மெல்லிய அடுக்கைத் தாக்க முனைகின்றன. இந்த மெல்லிய அடுக்கு வீக்கமடைந்து, சுற்றியுள்ள எலும்புகள், குருத்தெலும்பு, தசைநாண்கள் மற்றும் தசைநார்கள் ஆகியவற்றை பாதிக்கிறது. இதன் விளைவாக முடக்கு வாதம் ஏற்படுகிறது. மரபணுக்கள், சில வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்று நோய்களுக்கு ஆளாக்குகின்றன.

இதையும் படியுங்கள்:
உறவும் நட்பும் என்றும் இனிக்க கடைப்பிடிக்க வேண்டியவை எவை தெரியுமா?
Let's know about Rheumatoid Arthritis completely

1. மரபணு காரணிகள்: முடக்கு வாத நோய்களின் வளர்ச்சியில் மரபணுக்கள் முக்கியப் பங்கு வகிப்பதால் நெருங்கிய குடும்ப உறுப்பினருக்கு இந்த நோய் இருந்தால் அது மற்றொருவரையும் தாக்கும் அபாயம் உள்ளது.

2. வயது: நடுத்தர வயதில் இது உருவாகும் வாய்ப்பு அதிகம். 60 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே இது அதிகமாகக் காணப்படுகிறது.

3. பாலினம்: ஆண்களை விட பெண்களுக்கு இந்நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம், ஏனெனில் கர்ப்பம் மற்றும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் நோய் பாதிப்புக்கு பெண்களை உள்ளாக்குகின்றன.

4. உடல் பருமன்: உடல் பருமனானவர்களுக்கு இந்த நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அதிகப்படியான கொழுப்பு திசு உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும் புரதங்களை வெளியிடுவதால் இது நோயின் தீவிரத்தை அதிகரிக்கிறது.

5. அதிக பிறப்பு எடை: அதிக பிறப்பு எடை (4 கிலோ) RA ன் அபாயத்துடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

6. புகைபிடித்தல்: புகைப்பிடிக்கும் நபர்களுக்கு இந்த நோய் கணிசமாக உண்டாகும் ஆபத்து உள்ளது.

7. உணவு முறை: அதிகமாக சிவப்பு இறைச்சி உட்கொள்ளுதல், அதிக உப்பு, காபி அதிகமாக குடிப்பவர்கள், வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்களுக்கு முடக்குவாதம் ஏற்படலாம்.

8. நோய்த்தொற்றுகள்: சில நுண்ணுயிர்கள் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் சிக்கன்குனியா போன்ற நோய்கள் பாதித்தவர்களுக்கு இந்த முடக்கு வாதம் வரலாம்.

9. ஈறு அழற்சி: ஈறுகளில் ஏற்படும் நாள்பட்ட அழற்சி முடக்கு வாத நோயை வரவேற்கிறது.

இந்த நோய் தீவிரத்தை குறைக்கும் பழங்கள், உணவுகள்: முடக்கு வாதத்தை எதிர்த்துப் போராடும் பழங்களில் செர்ரிக்கள், ஸ்ட்ராபெரிகள் அவகோடா, தர்பூசணி, திராட்சை போன்ற பழங்கள் வலியின் தீவிரத்தை குறைக்கின்றன ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சால்மன் சார்டைன் போன்ற மீன் வகைகள் மீன் எண்ணெய் மாத்திரைகள் இந்நோய் நிவாரணத்துக்கு உதவுகின்றன. பாதாம், வேர்க்கடலை, பிஸ்தா, வால்நட் போன்ற உலர் பழங்களில் நிறைய நார்ச்சத்துக்கள், கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் இ, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை உள்ளன. அதேபோல நெய் மூட்டுகளுக்கு சிறந்த உணவாகும். அது வீக்கத்தையும் வலியையும் குறைக்கிறது.

கட்டாயம் தவிர்க்கவேண்டிய உணவுகள்: வறுத்துப் பொரித்த உணவுகள், கிரில்ட் சிக்கன், பொறித்த மட்டன் வகைகள் க்ளூட்டன் நிறைந்த உணவுகளைத் தவிர்க்கவும். புகைப்பிடித்தல், மது அருந்துதல் கூடவே கூடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com