
இந்திய உணவுகளில் நாம் ஒருபோதும் தவிர்க்க முடியாத விஷயங்களில் வெள்ளை பூண்டும் ஒன்று. இதன் மருத்துவ குணங்கள் நாம் அனைவருக்குமே தெரிந்ததுதான் என்றாலும், பூண்டு ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பூண்டில் இயற்கையாகவே அசிலின் என்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட் பொருள் நிறைந்துள்ளது. இதுதான் பூண்டை சிறப்பான ஒன்றாக மாற்றுகிறது. இது இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.
இரத்த சோகை உள்ளவர்களுக்கு பூண்டு ஒரு வரப்பிரசாதம். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, அதனால் ஏற்படும் பல பாதிப்புகளை சரி செய்கிறது. பாலில் பூண்டை சேர்த்து குடித்து வந்தால், இரத்த அழுத்தம், மாரடைப்பு உங்களை அண்டவே அண்டாது. தினசரி ஒரு ஸ்பூன் நசுக்கிய பூண்டை சாப்பிட்டு வந்தாலே இதய நோய்கள் குணமாகும். இது உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழித்து, எலும்பையும் வலுவாக்கும் தன்மை கொண்டது.
பூண்டு சாப்பிடுவதால் ஜீரண சக்தி அதிகரிக்கும். இது செரிமான கோளாறுகளை சரி செய்து, உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் உடல் எடை குறைப்பதற்கும் பூண்டு பயன்படுத்தலாம். தினசரி ஒரு ஐந்து பல் பூண்டையாவது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கணிசமாகக் குறையும்.
தாய்ப்பாலை விருத்தி செய்யவும், ஆண்களின் பாலியல் ஆரோக்கியம் மேம்படவும் பூண்டு உதவும். குறிப்பாக, தினசரி பூண்டு ஜூஸ் குடித்து வந்தால், உடலில் ஏற்படும் படை, பூச்சிக்கடியினால் ஏற்படும் அரிப்புகள் உடனடியாக சரியாகிவிடும். 200 மில்லி தண்ணீரில் கொஞ்சம் பூண்டு சாறு கலந்து குடித்தால் ஆஸ்துமா பிரச்னையை எளிதில் சரி செய்யலாம். அத்துடன் இரத்தக் குழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்தும் கொழுப்புகளையும் இது கரைக்கும். இதில் அதிகப்படியான சல்பர் உள்ளதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, பல நோய்களிலிருந்து நம்மைக் காக்கிறது.
பூண்டு ஜூஸ் குடிப்பதால் புற்றுநோய் செல்கள் அதிகரிப்பது கட்டுப்படுத்தப்படும். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்த உதவுகிறது. அதேபோல, மழைக்காலத்தில் ஏற்படும் இருமல், தொண்டைப்புண் போன்றவற்றையும் இது நீக்குகிறது. இதனால் பூண்டை நுரையீரலின் தோழன் என்றே சொல்கிறார்கள்.
வெறும் பூண்டு ஜூஸ் குடிப்பதற்கு முகம் சுளிப்வர்கள், அதை மாதுளம்பழம் ஜூஸுடன் கலந்து குடித்தால், அதிக ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். பூண்டை தோலை உரித்து சுத்தமாக கழுவி, தண்ணீர் விட்டு மைய அரைத்து வடிகட்டி எடுத்துக்கொண்டு, இஞ்சி சாரில் சேர்த்தும் சாப்பிடலாம். இதனால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.