இந்த 6 குறைந்த கலோரி தின்பண்டங்களைச் சாப்பிட்டால், உங்கள் உடலில் உள்ள கொழுப்பு காணாமல் போகும்! 

low calorie snacks for weight loss
low calorie snacks for weight loss
Published on

எடை இழப்பு என்று வரும்போது நாம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். அதே நேரம் சாப்பிடும் உணவுகளில் அதிகமான கலோரி இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த பதிவில் உங்களது எடை இழப்பு இலக்கை அடைய உதவும் சுவையான குறைந்த கலோரி நிறைந்த தின்பண்டங்கள் பற்றி பார்க்கலாம். இதை எளிதாக நீங்களே வீட்டில் செய்து விட முடியும். எண்ணெயில் பொரித்த உணவுகளுக்கு பதிலாக, இவற்றை சாப்பிடும்போது, திருப்திகரமாகவே உடல் எடையைக் குறைக்கலாம். 

முளைக்கட்டிய பச்சைப் பயறு: முளைகட்டிய பச்சைப் பயரில் நார்ச்சத்து, புரதம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது தக்காளி, வெள்ளரிக்காய், வெங்காயம் போன்றவற்றை பொடியாக நறுக்கிப் போட்டு, சிறிதளவு உப்பு மற்றும் கரம் மசாலாவை இதில் கலந்து, சாட் போல தயாரித்து சாப்பிட்டால் சுவை நன்றாக இருக்கும். 

வேகவைத்த வெஜிடபிள் கட்லட்: உங்களுக்குப் பிடித்த காய்கறிகளை நன்கு வேக வைத்து, பின்னர் அவற்றை கட்டலெட்டுகளாக செய்து சாப்பிடலாம். இதை செய்வதற்கு கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ் போன்றவற்றை வேக வைத்து நன்றாகப் பிசைந்து, தட்டையாக்கி, பிரெட் தூளில் தொட்டு இருபுறமும் வேகும்படி தோசைக்கல்லில் சுட்டு எடுத்தால், வெஜிடபிள் கட்லெட் ரெடி. 

வறுத்த மசாலா கொண்டைக்கடலை: சன்னா என அழைக்கப்படும் கொண்டைக்கடலை ஒரு ஆரோக்கியமான உணவாகும். நன்கு காய்ந்த கொண்டக்கடலையை தண்ணீரில் நனைத்து, கொத்தமல்லி மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகம் போன்ற மசாலாக்களை சேர்த்து மிதமான சூட்டில் வாணலியில் வறுத்து சாப்பிட்டால், புரதச்சத்து நிறைந்த சூப்பர் ஸ்னாக் தயார். 

வெள்ளரிக்காய் ரைத்தா: வெள்ளரிக்காய் பயன்படுத்தி செய்யப்படும் ரைத்தா ஒரு புத்துணர்ச்சி ஊட்டும் தயிர் சார்ந்த சைடு டிஷ் ஆகும். இது உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் சாப்பிடக்கூடிய சிறந்த ஸ்னாக். இதை செய்வதற்கு வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி, தயிருடன் கலந்து சீரகத்தூள், புதினா இலைகள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சாப்பிட்டால், உடல் எடை இழப்புக்கு பெரிதும் உதவும். 

இதையும் படியுங்கள்:
பொங்கி வரும் பருப்பு, அணஞ்சி போகும் அடுப்பு... நச்சுனு 4 கிச்சன் டிப்ஸ்! 
low calorie snacks for weight loss

சுண்டல்: சில குறிப்பிட்ட பருப்பு வகைகளை வேகவைத்து செய்யப்படும் புரதம் நிறைந்த உணவுதான் இந்த சுண்டல். கொண்டைக்கடலை, காராமணி அல்லது பச்சை பயறு போன்ற பயர் வகைகளை ஊற வைத்து, பின்னர் வேக வைக்க வேண்டும். அடுத்ததாக அதில் கொஞ்சம் கடுகு, கருவேப்பிலை, எலுமிச்சை சாறு பிழிந்து தாளித்தால் சூப்பர் சுவையில் சுண்டல் ரெடி. இதில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நார்சத்துக்களும் நிறைந்துள்ளது. அதே நேரம் கலோரியும் குறைவுதான் என்பதால், உடல் எடை இழப்புக்கு பெரிதும் உதவும்.

மசாலா பொரி: உங்களுக்கு மேலே குறிப்பிட்ட எந்த ஸ்னாக்கும் செய்ய முடியவில்லை என்றால், கடைக்கு சென்று பத்து ரூபாய் கொடுத்து பொரி வாங்கி சாப்பிடுங்கள். இதை நேரடியாக அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக, தக்காளி, வெங்காயம், துருவிய கேரட், எலுமிச்சை சாறு போன்றவற்றை சேர்த்து, சாட் மசாலா தூவி அப்படியே கலந்து மசாலா பொரியாக்கி சாப்பிட்டால், இதைவிட அற்புதமான குறைந்த கலோரி உணவு இருக்கவா போகிறது?.

இவை அனைத்துமே குறைந்த கலோரியை எடுத்துக் கொள்ள விரும்புபவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகளாகும். இதை அதிகமாக சாப்பிட்டாலும் உங்கள் உடல் எடை கூடாது. எனவே இவற்றை சாப்பிட்டு ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க முயலுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com