மாவிலையிலிருக்கும் மகத்தான மருத்துவ குணங்கள்!

Magnificent medicinal properties of mango leave
Magnificent medicinal properties of mango leavehttps://agrictoday.com

மாம்பழ சீசன் மிக அருகில் நெருங்கிக்கொண்டிருக்கும் நேரம் இது. மாம்பழங்களில் அதிகளவு வைட்டமின்கள், மினரல்கள், நார்ச்சத்துக்கள், இயற்கையான இனிப்பு சத்துக்கள் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பது அனைவரும் அறிந்ததே. மா மரத்தின் இலைகளிலும் நம் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

மா இலையில் அடங்கியிருக்கும் மாங்கிஃபெரின் மற்றும் ஃபிளவனாய்ட் போன்ற கூட்டுப் பொருட்கள் இரத்த சர்க்கரை அளவை சம நிலையில் வைக்க உதவுகிறது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் அடிக்கடி மாவிலை டீ அருந்தி வந்தால் நோயிலிருந்து குணம் பெறும் வாய்ப்புண்டு.

மா இலைகளில் உள்ள நார்ச்சத்து செரிமானம் சிறப்பாக நடைபெற உதவுகிறது. மேலும், பேதி மற்றும் மலச்சிக்கல் வராமலும் பாதுகாக்கிறது. மாவிலை டீ அல்லது கொதிநீரில் மாவிலைகளை சேர்த்து, சாறை வடிகட்டி அருந்தி வந்தால் இரைப்பை மற்றும் ஜீரண உறுப்புகளின் இயக்கம் கோளாறின்றி நடைபெறும்.

இள மாவிலைகளை  தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடலின் மொத்த ஆரோக்கியம் மேம்படும். ஆக்சிடேடிவ் ஸ்ட்ரெஸ் மூலம் உண்டாகும் செல் சிதைவுகள் தடுக்கப்பட்டு நாள்பட்ட வியாதிகள் உண்டாகும் அபாயம் குறையும்.

மாவிலையில் LDL எனப்படும் கெட்ட கொழுப்பைக் குறைக்கும் குணமும் உண்டு. இதனால் இரத்த ஓட்டம் தடையின்றி செல்கிறது; உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் இரத்த அழுத்தம் சமநிலைப்படுகிறது. இதனால் இதய ஆரோக்கியம் காக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பேசுவதைக் குறைத்து, கேட்பதை அதிகரிப்பதில் இத்தனை பயன்களா?
Magnificent medicinal properties of mango leave

மாவிலையில் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் அதிகம் உள்ளது. இது உடலில் வீக்கம் ஏற்படும் அறிகுறிகளைக் களைந்து, ஆர்த்ரைடிஸ் நோய் வருவதைத் தடுக்கிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் சருமத்திற்கு கூடுதல் ஆரோக்கியம் தருகின்றன; பரு மற்றும் கரும்புள்ளிகளை நீக்குகின்றன. பொலிவான சருமம் பெற உதவுகின்றன. முடி உதிர்வைத் தடுத்து அடர்த்தியான கூந்தல் பெற உதவுகின்றன. மாவிலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதில் சிறிது தேன் சேர்த்து பருக ஆஸ்துமா குணமாகும்.

மாவிலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சாறெடுத்துப் பருகலாம்; மாவிலை டீ பேக் உபயோகித்து டீ போட்டுப் பருகலாம்; மாவிலையை காயவைத்துப் பொடி செய்தும் சூடு நீரில் கலந்து அருந்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com