Makhana with Groundnut
Makhana Vs Groundnut

மக்கானா Vs வேர்க்கடலை: உடல் எடையை குறைப்பதில் எது சிறந்தது?

Published on

உடல் எடையை குறைப்பதில் சிறந்த ஒன்றாக விளங்குவது மக்கானாவா அல்லது வேர்க்கடலையா? என்ற வினாவுக்கு விடை இங்கே பார்ப்போம்.

உடல் எடையை குறைக்க பலரும் சிரமப்பட்டு வருகின்றனர். அதுவும் ஆரோக்கியமான முறையில் குறைப்பது மிகவும் கடினம்தான். ஆனால், தொடர்ந்து முயற்சித்து வந்தால் பலன் கண்டிப்பாக கிட்டும்.

மக்கானா மற்றும் வேர்க்கடலை இவை இரண்டுமே உடல் எடையை குறைப்பதில் சிறந்த பங்காற்றும். இவை இரண்டையும் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். ஆனால், இவற்றில் எது விரைவாக உடல் எடையை குறைக்கும் என்பதைப் பார்ப்போம்.

மக்கானாவில் உள்ள ஆக்சிடண்ட்டுகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் ஜீரண ஆற்றலை அதிகரிக்கச் செய்வதோடு, விரைவில் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கும்.

வேர்க்கடலையில் நிறைய புரதங்கள் உள்ளன. அதோடு ஃபிளவனாய்டுகள் என்னும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் இதில் அதிகமாக இருப்பதால் உடலில் இன்ஃபிளமேஷன்கள் ஏற்படாமல் தடுக்கும். அதேபோல் ரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.

இரண்டுமே உடலுக்கு மிகவும் நன்மைகள் தரக்கூடியவை என்றாலும், இவற்றில் அதிகமான கலோரிகள் எதில் உள்ளது என்பதை தெரிந்துக்கொள்வது அவசியம். மக்கானாவைவிட வேர்க்கடலையில்தான் அதிகம் கலோரிகள் உள்ளன.   50 கிராம் மக்கானாவில் 180 கலோரிகள் உள்ளன. ஆனால், வேர்க்கடலையில் அதே 50 கிராமில் 284 கலோரிகள் உள்ளன.

அதேபோல் புரதமும் மக்கானாவை விட வேர்க்கடலையில் அதிகம். 50 கிராம் மக்கானாவில் 9.7 கிராம் அளவு புரதம் கிடைக்கும். இதே 50 கிராம் வேர்க்கடலையில் 13 கிராம் புரதம் இருக்கிறது.

ஆனால் நார்ச்சத்தை பொறுத்தவரை மக்கானாவிலேயே அதிகம் உள்ளது.

உங்கள் உடம்பிற்கு எது தேவையோ அதற்கேற்றவாரு தேர்ந்தெடுப்பது நல்லது. மக்கானா மற்றும் வேர்க்கடலை இரண்டுமே சம அளவு உடலுக்கு ஆரோக்கியமானதுதான்.

இதையும் படியுங்கள்:
சருமத்தில் உள்ள தேவையில்லாத முடியை நீக்க உதவும் இயற்கை முறைகள் இதோ! 
Makhana with Groundnut

ஆனால், உங்கள் உடம்பில் நார்ச்சத்து குறைவாக இருந்தால் மக்கானா எடுத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை புரதம் மற்றும் கலோரி தேவைப்படுகிறது என்றால், வேர்க்கடலையை எடுத்துக்கொள்ளுங்கள்.

மூன்றுமே வேண்டும் என்று சொல்பவர்கள், ஒருநாள் விட்டு ஒருநாள் டயட்டில் இரண்டையும் மாற்றி மாற்றி எடுத்துக்கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com