சாதம் சாப்பிடும் போது இந்த தவறை செய்யாதீங்க.. உங்க உயிருக்கே ஆபத்தாகிடும்!

Rice
Rice
Published on

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் 3 வேளையும் சாதத்தை தான் உட்கொள்கிறார்கள். அரிசியில் அதிக கார்போஹைட்ரேட் இருப்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் அதிகமானோர் மீந்த சாதத்தை தூக்கி எறியாமல் மிச்சம் வைத்து மறுநாள் உட்கொள்கிறார்கள்.

காலையில் வைக்கும் சாதத்தை 3 வேளை பயன்படுத்துவதே தவறு என ஆய்வுகள் கூறுகின்றன. இதை மறுநாள் முறையாக பயன்படுத்தாமல் சாப்பிடுவது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்குமாம். இந்த மீந்த சாதத்தை பலரும் எப்படி பயன்படுத்த வேண்டும் என தெரியாமல் இருக்கிறார்கள். இதனால் உடலுக்கு என்ன பிரச்சனை வரும் என்று கூட பலருக்கும் தெரியாது. மீந்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்தால் கூட நல்லதாகும். ஆனால் அதை அப்படியே வைத்திருப்பது நச்சுக்களை உருவாக்க வழிவகுக்குமாம்.

சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கையில், 90% மக்களும் அரிசி உணவு விஷயத்தில் செய்யும் பொதுவான தவறு உயிருக்கு ஆபத்தாக மாறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பேசிலஸ் செரியஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியா, சாதத்தை நீண்ட நேரம் வைத்திருக்கும்போது இயற்கையாகவே உருவாகி, பெருகிவிடும். இதை மீண்டும் சூடு செய்தால் கூட வெப்பத்தில் செத்துவிடும் என்று நினைத்தால் அது தவறானது. அறை வெப்பநிலையில் இது வேகமாக வளர்ந்து, மேலும், சில நச்சுக்களை வெளியிடுகிறது.

இது குமட்டல், வயிற்றுபோக்கு, வயிற்று வலி போன்ற கடுமையான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும் சில சமயங்களில் இதுவே சர்க்கரை நோய்க்கு வழிவகுப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆபத்தான பாக்டீரியாவிலிருந்து உங்களை பாதுகாக்க, சாதத்தை சமைத்தவுடன் சூடாக உட்கொள்வது தான் நல்லது. குறிப்பிட்ட நேரம் வரை தான் அதில் பாக்டீரியா உருவாகாமல் இருக்கும். அதற்குள் சாப்பிடமுடியாவிட்டால் குளிர்சாதன பெட்டியில் வைப்பது நல்லது. அப்படி ஃப்ரிட்ஜில் வைத்தாலும் அதையும் 24 மணி நேரத்திற்குள் சாப்பிட்டு விட வேண்டும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

இதையும் படியுங்கள்:
விண்வெளியில் உடல்நலக்குறைவு ஏற்பட்டால்...? என்ன ஆகும் தெரியுமா?
Rice

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com