பின் கழுத்து கருமைக்கான மருத்துவக் காரணங்களும் தீர்வுகளும்!

கழுத்து கறுமை
கழுத்து கறுமைhttps://www.onlymyhealth.com
Published on

சிலருக்கு கழுத்து மட்டும் கருப்பாகக் காட்சியளிக்கும். கழுத்தின் பின்புறத்தில் உள்ள கருப்பு நிறத்திற்கான காரணம், ‘அகாந்தோசிஸ் நைக்ரிக்கென்ஸ்’ எனப்படும் ஒரு சரும நிலையாகும். சிலர் உடல் மற்றும் முகம் சிவப்பாக இருந்தாலும் கழுத்தின் பின்புறத்தில் மட்டும் கருமை நிறமாகக் காட்சியளிக்கும். இது ஒரு சருமக் கோளாறு ஆகும். இதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

பின்னங்கழுத்து கருமைக்கான காரணங்கள்:

இன்சுலின் எதிர்ப்பு: வகை 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு கழுத்துக் கருப்பு ஏற்படும். இது அதிக இன்சுலின் அளவு, சரும செல்களை வேகமாக வளரத் தூண்டுகிறது. இதனால் சருமம் தடித்து கருமை ஆகிறது. கழுத்தின் பின்புறம் மட்டுமல்லாது, அக்குள் மற்றும் தொடைப் பகுதிகளிலும் கருமையாக மாறிவிடும்.

உடல் பருமன்: அதிக எடையுடன் இருப்பதும் கழுத்து கறுப்பிற்கான ஒரு முக்கியமான காரணி ஆகும். உடல் பருமன் அதிகரிக்கும்போது இன்சுலின் அளவையும் அதிகரிக்கிறது. இதுவே கழுத்து கருப்பு நிறமாக மாற காரணமாகி விடுகிறது.

மரபியல்: சில சமயங்களில் மரபணு ரீதியான காரணங்களாலும் கழுத்துக் கருமை ஏற்படலாம்.

ஹார்மோன் கோளாறுகள்: உடலில் ஹார்மோன் கோளாறுகள் உள்ளவர்களுக்கு கழுத்து கருமை ஏற்படும். பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம், குஷிங்ஸ் சிண்ட்ரோம், தைராய்டு பிரச்னைகள் போன்றவை ஹார்மோன் சமநிலை இன்மைக்கு வித்திடும். அது கழுத்து கருமையை ஏற்படுத்தும். கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கு, அல்லது குழந்தை பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் எடுத்துக் கொள்பவருக்கும் ஹைபர் பிக்மென்டேஷன் ஏற்படலாம். சிலருக்கு தாம் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் காரணமாகவும் இது இருக்கலாம்.

வேறு காரணங்கள்: வயிறு அல்லது கல்லீரல் புற்று நோய்கள் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு கழுத்து கருமை தோன்றலாம். ஆனால். இது மிகவும் அரிதானது.

சூரிய ஒளி: நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பது கழுத்தில் ஹைப்பர் பிக்மென்டேஷனை ஏற்படுத்தும். மேலும். இது முகம் மற்றும் சருமத்தை கருமையாக்கும்.

மோசமான சுகாதாரம்: சரும மடிப்புகளில் வியர்வை அழுக்கு மற்றும் இறந்த சரும செல்கள் தங்குவதும் நிற மாற்றத்திற்கு வழிவகுக்கும்.

பூஞ்சை தொற்றுகள்: சில சமயங்களில் பூஞ்சை தொற்றுகள் கழுத்து உட்பட சரும மடிப்புகளில் கருமை நிறத்தை ஏற்படுத்தும் அல்லது கருப்பு திட்டுகளாகப் படியலாம்.

ஒவ்வாமை எதிர்வினைகள்: சில சரும பராமரிப்பு பொருட்கள் அல்லது நகைகள் அணிவதால் ஒவ்வாமை ஏற்படும். இவை கழுத்து கருமையை ஏற்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
கால் மூட்டுகளை வலுவாக்கும் 5 வழிகள்!
கழுத்து கறுமை

தீர்வுகள்: வெளியில் செல்லும்போது அவசியம் குடை எடுத்துச் செல்லவும். இது புற ஊதா கதிர்வீச்சை எதிர்கொள்ள உதவும். உடல் சுத்தத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும். கழுத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பூஞ்சை தொற்றுகள் ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும். ஒவ்வாமையைத் தரும் அணிகலன்களை தவிர்க்க வேண்டும்.

இன்சுலின் அளவை சரியாக பராமரிக்க வேண்டும். இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்வது அவசியம். எடை மேலாண்மையை அவசியம் கடைபிடிக்க வேண்டும்.

அடிப்படை சுகாதார நிலைமைகளை நிவர்த்தி செய்வதன் மூலமும், நல்ல சரும பராமரிப்பு நடைமுறைகளைப் பராமரிப்பதன் மூலமும், கழுத்தில் கருமை நிறமாற்றம் ஏற்படுவதைத் தடுக்கலாம் அல்லது குறைக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com