அன்றாட பிரச்னைகள் 4; தீர்வு 1: என்னன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க!

Medicinal benefits of vilvam leaf
Medicinal benefits of vilvam leafhttps://tamil.webdunia.com

ம்மைச் சுற்றி பலவிதமான மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்கள் காணப்படுகின்றன. ஆனால், நமக்குதான் அவற்றின்  நன்மைகள் மற்றும் பயன்கள் குறித்த விழிப்புணர்வு போதுமான அளவு இருப்பதில்லை. நம்மில் பலரும் அறியாத பல மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு மரம் என்றால் அது வில்வமரம்தான். மருத்துவ ரீதியாக மட்டுமின்றி, தெய்வீக ரீதியாகவும் இது மிகவும் சிறப்பான விருட்சமாகும். நாம் வீட்டில் வில்வ மரம்  வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் வந்து சேரும். அந்த வகையில் நம்முடைய உடலில் வெயிலின் சூட்டால் ஏற்படக்கூடிய நான்கு முக்கியப் பிரச்னைகளுக்கும் தீர்வாக விளங்குகிறது சிவபெருமானுக்கு உகந்த வில்வம்.

கண் பிரச்னைகள்: சுற்றுச்சூழல் மாசு காரணமாக நமக்கு சருமப் பிரச்னைகளோடு கண் பிரச்னைகளும்  வரலாம். அதுமட்டுமின்றி,  கண்கள் சிவத்தல், கண் அரிப்பு, கண் வலி போன்ற அனைத்துக்கும் அருமருந்தாக இருப்பது வில்வ இலைதான். வில்வ இலையை வதக்கி சூட்டுடன் நம் கண்களின் இமைகளுக்கு மேல்  ஒத்தி எடுத்து வந்தால் கண் மற்றும் சருமம் சார்ந்த பாதிப்புகளில் இருந்து கூட எளிதில் குணமடையலாம்.

முடி உதிர்வு: முடி உதிர்வு என்பது இன்று பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய  பிரச்னையாகும். மேலும், முடி உதிர்வதால் மன அழுத்தம் ஏற்படுகிறதா? அல்லது மன அழுத்தத்தால் முடி உதிர்கிறதா? என்ற கேள்வி பலரது மனதிலும் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது. எனவே, இதிலிருந்து விடுபடுவதற்கு வில்வ காய் ஒரு சிறந்த தீர்வாகும். இதற்கு முதலில் வில்வ காயை எடுத்து அரைத்து, பிறகு அதில் பால் கலந்து நம்முடைய தலையில்  தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முடி உதிர்தல் பிரச்னை  குறையும்.

இதையும் படியுங்கள்:
தண்ணீரில் ஊறவைத்த சியா விதைகளை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? 
Medicinal benefits of vilvam leaf

தீராத வயிறு வலி: வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் உடல் சூடு காரணமாக அடிக்கடி வயிறு வலி ஏற்படலாம். இதற்கு வில்வ இலையை நீரில் ஊற வைத்து  எட்டு மணி நேரம் கழித்து, இலைகளை எடுத்து விட்டு நீரை மட்டும் அருந்தி வந்தால் தீராத  வயிற்று வலி தீரும்.

மங்கு நீங்கும்: வில்வ மரத்தின் காயை நீர் விடாமல் அரைத்து முகம் முழுக்க பூசவும். அதிலும் குறிப்பாக மங்கு இருக்கும் இடங்களில் பூசிக் கொள்ளவும். இதை ஒரு மணி நேரம் காய விடுவது நல்லது. குறிப்பாக, இரவு நேரங்களில் இதனை அரைத்துப் பூசிக்கொள்வதன் மூலம் இதன் பயன் இன்னும் வேகமாகக் கிடைக்கும். தொடர்ந்து நம்முடைய சருமத்தில் உள்ள மங்கு மறையும் வரை இதனைப் பூசி வந்தால் சிறிது நாட்களிலேயே மங்கு நீங்குவதை உணரலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com