தேங்காய் பூவின் மருத்துவ மகத்துவம்!

Medicinal Magnificence of Coconut Flower!
Medicinal Magnificence of Coconut Flower!https://canadamirror.com

தேங்காயை உணவில் சேர்த்துகொள்வதால் பல நன்மைகள் உண்டு. தேங்காய் மற்றும் அதன் நீர் என்று அதனால் பல பயன்கள் உண்டு என்பதும் நாம் அறிந்ததுதான். ஆனால், தேங்காய் பூ உண்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?

தேங்காய் பூ என்பது உண்மையிலே பூ கிடையாது. அது நன்றாக முற்றிய தேங்காயில் ஏற்படும் தளிராகும். முற்றிய தேங்காய்க்குள் தானாகவே தேங்காய் நீர் மற்றும் அதனுடைய சதை பகுதி சேர்ந்து முளைத்து வரும் மஞ்சள் நிற மிருதுவான பகுதியின் சுவை சாப்பிடுவதற்கு இனிப்பும் உப்பும் கலந்த சுவையாக இருக்கும். பார்ப்பதற்கு சிறியதாக இருக்கும் இந்த தேங்காய் பூவில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம்!

கோயில்கள் போன்ற புனித தலங்களில் தேங்காய் உடைக்கும்போது தேங்காய் பூ வந்தால், அது நல்ல சகுனமாகக் கருதப்படும். அதேபோல், திருமணம், வேலை வாய்ப்பு போன்ற நல்ல விஷயங்கள் குடும்பத்தில் நடக்கும் என்று நம்பப்படுகிறது.

பெண்கள் தேங்காய் பூ சாப்பிடுவதால் கருப்பை சுத்தமாகும். கர்ப்பமான பெண்களுக்கும் தேங்காய் பூ கொடுப்பது மிகவும் நல்லதாகும். தேங்காய் பூவில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மினரல், வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் இருக்கின்றன. இதை சாப்பிடுவதால் கருவுற்ற பெண்களின் முதுகு வலி குணமாகும். உடல் வலிமை பெறுவது மட்டுமில்லாமல், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கிறது.

தேங்காய் பூ இருதய நோயை குணப்படுத்த வல்லது. இதில் நார்ச்சத்து, பொட்டாசியம் இருப்பதால் இதயத்திற்கு மிகவும் நல்லதாகும். அது மட்டுமில்லாமல், உடல் எடை அதிகம் உள்ளவர்கள் தேங்காய் பூ சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்தத்தில் இருக்கும் சக்கரையின் அளவு குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளதால் சிறுநீரகத்தில் கல் ஏற்படாமல் தடுக்கும். ஆன்டி ஆக்ஸிடன்ட் முகத்தில் ஏற்படும் சுருக்கத்தை குறைக்கும்.

தினமும் தேங்காய் பூ சாப்பிடுவது பெண்களின் மாதவிடாய் பிரச்னையையும் தீர்க்கும். அது மட்டுமில்லாமல், வயிற்று பிரச்னையான டையேரியா மற்றும் டைசென்ட்ரியை போக்கும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் என்பது ஒரு மிகப் பெரிய பிரச்னையாகும். தேங்காய் பூ இந்தப் பிரச்னையை நீக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
தூங்குவதற்கு முன் கட்டாயம் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!
Medicinal Magnificence of Coconut Flower!

புற்றுநோயை குணப்படுத்தும் தன்மை தேங்காய் பூவுக்கு உண்டு. புற்று நோய் செல்களை தாக்கி அழிக்கக்கூடிய சக்தி தேங்காய் பூவுக்கு உண்டு. தைராய்ட் பிரச்னைகள் உள்ளவர்களுக்கு மாமருந்து தேங்காய் பூவாகும். எத்தனை வருடம் தைராய்ட் பிரச்னை இருந்திருந்தாலும் தேங்காய் பூவை தொடர்ந்து சாப்பிட்டு வர தைராய்ட் பிரச்னை குறையும். ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்க தேங்காய் பூ உதவுகிறது.

ஒரு தேங்காய் 10 முதல் 15 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதுவே தேங்காய் பூவாக விற்கும்பொழுது 50 முதல் 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தேங்காய் பூவில் அதிக சத்து இருப்பதால் மக்களும் விரும்பி வாங்கி சாப்பிடுகிறார்கள்.

நன்கு முற்றிய தேங்காயை மண்ணில் புதைத்து வைத்து நான்கு மாதம் கழித்து பார்க்கும்போது தேங்காய் முளைவிட்டிருக்கும். அப்படி முளைவிட்ட தேங்காயின் உட்புறத்தில் இருப்பதே தேங்காய் பூவாகும். தேங்காய் பூவில் இருக்கும் பலவித நன்மைகளை உணர்ந்து மக்கள் இதை விரும்பி வாங்கி உண்ண ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com