Midukkan kai
Midukkan kai

மிதுக்கன் காயில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்!

Published on

செடி, கொடி புதர் ஓரங்களில் சர்வ சாதாரணமாகக் காணப்படுவ்து மிதுக்கன்காய். கொடியில் காய்க்கும் வகையைச் இதனை சிமிட்டிக்காய், சுக்காங்காய் என்றும் அழைப்பர். இந்தக் காய் ஒரு மூலிகை வகையைச் சார்ந்தது. தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில் பல இடங்களிலும், களை செடி போல தானாகவே முளைத்து தரையில் கொடி வீசி வளரும். ஏறக்குறைய கோவக்காய் அளவில் சற்று குண்டாக இருக்கும். இந்தக் காயில் கசப்பு சுவையும், பழுத்த பின் சிறிது புளிப்புடன் இனிப்பு சுவையும் கலந்திருக்கும்.

இந்தக் காயை உணவில் சேர்த்துக்கொள்வதால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்கள் குணமாகும். மூட்டு வலி குறையும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல் வலி குறையும். இதில் நல்ல கொழுப்பு மற்றும் அமினோ அமிலம் அடங்கியுள்ளது. சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் போன்ற உடல் நலக் குறைபாடுகளை சீராக்கவும் மிதுக்கன் காய் உதவுகிறது.

மிதுக்கன் செடியின் இலை, வேர், காய் என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. மிதுக்க வற்றல் அனைத்துப் பெரிய ஸ்டோர்களிலும் கிடைக்கக் கூடியது. ஆன்லைன் பர்ச்சேஸும் பண்ணலாம். உங்கள் வீடுகளில் இந்தச் செடி தானாக முளைத்திருந்தால் வளரச் செய்து பயன் பெறுங்கள்.

இதையும் படியுங்கள்:
உடலுக்கு நலம் பயக்கும் நல்ல கொழுப்பின் அவசியம்!
Midukkan kai

இந்தக் காய்களைப் பறித்து நான்கு துண்டாக வெட்டி வெயிலில் நன்கு காய வைத்துப் பிறகு கெட்டித் தயிரில் பிசிறி ஒரு நாள் முழுக்க ஊற விட்டு மீண்டும் காய வைத்து எடுக்க, சூப்பரான மிதுக்க வற்றல் கிடைக்கும். இந்த வற்றலை எண்ணெயில் பொரித்து, உப்பு தூவி சாதத்துக்கு தொட்டுக்கொள்ள சுவை அள்ளும்! பழங்களை வெட்டி சாலட்டுடன் சேர்த்து சாப்பிடலாம். தனியாக உப்பு காரப்பொடி தூவியும் சாப்பிடலாம். இது புளிப்பு சுவை கொண்டுள்ளதால் காரக்குழம்பு செய்தும் உண்ணலாம். உடல் நலத்துக்கு பேருதவி புரியும் இந்த மிதுக்கன்காய் சித்த மருத்துவத்தில் நல்ல மருந்து பொருளாகத் திகழ்கிறது.

logo
Kalki Online
kalkionline.com