நாவை சுண்டி இழுக்கும் புளியில் இத்தனை விஷயங்களா?

Medicinal properties of tamarind
Medicinal properties of tamarindhttps://www.onlymyhealth.com
Published on

மிழகத்தில் உப்பு, புளி, காரம் என்பது எல்லாவற்றிலும் அளவாக இருக்க வேண்டும் என்று கூறுவோம். இன்னும் சிலர் புளி உபயோகிப்பதையே நிறுத்தி விடுவதும் உண்டு. புளி இரத்தத்தை சுண்ட வைக்கும் என்று கூறி புளி உபயோகப்படுத்தாத குடும்பங்களையும் பார்க்க முடியும். புளியிலும் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அதைப் பற்றி இப்பதிவில் காண்போம்.

புளிய இலை வீக்கம், கட்டி போன்றவற்றைக் கரைக்கும். தண்ணீரில் புளிய இலையை உருவிப் போட்டு கொதிக்க வைத்து அதை வலி உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும். தோள்பட்டை, மூட்டு போன்றவற்றில் வலி உள்ள இடங்களில் ஆமணக்கு எண்ணெய் தடவி அதன் மீது புளிய இலைகளை ஒட்டவைத்து இரண்டு, மூன்று மணி நேரம் கழித்து வெண்ணீரால் ஒத்தடம் கொடுக்க வலி இருந்த இடம் தெரியாமல் மறையும்.  கழுத்து சுளுக்குக்கு கண்கண்ட மருந்து இது.

புளியந்தளிர் இலையுடன் பருப்பு வகைகள், வர மிளகாய் போன்றவற்றை வறுத்து பொடியாக்கி சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட வயிற்று மந்தம் போகும். அப்படியே இதை துவையலாக அரைத்து சாப்பிட்டாலும் இதே பலனை பெறலாம். புளியம்பிஞ்சுடன், இஞ்சி, பச்சை கொத்தமல்லி, உப்பு சேர்த்து துவையலாக்கி தாளித்து உணவுடன் சாப்பிட்டால் பித்தம் தனியும். பசியை அதிகரிக்கும். பிஞ்சு காயின் மேல் தோலை சீவி விட்டு ஊறுகாய் செய்து சாப்பிட மசக்கைக்கு நல்ல மருந்தாகும். வாந்தி வருவது உடனடியாக நிற்கும்.

புது புளியை விட, பழைய புளியே மருத்துவத்திற்கு சிறந்தது. புளி, உப்பு சம அளவு சேர்த்து அரைத்து உள்நாக்கில் தடவி வர, உள்நாக்கில் சதை வளருதல் தடைபடும். பழைய புளியுடன், மஞ்சள் கரிசலாங்கண்ணி சேர்த்தரைத்து இரண்டு வேளை சிறிது அளவு சாப்பிட்டு வர கருப்பை இறக்கம் குணமாகும். புளியம்பூ உடலுக்குக் குளிர்ச்சி தரும். ஆதலால் புளியம் பூவை அரைத்து களி போல் கிளறி கண்ணைச் சுற்றி பற்று போட, கண் சிவப்பு மாறும். மெட்ராஸ் ஐ அல்ல. சாதாரண கண் வலி சுகம் பெறும். புளியம் பூக்களை அரைத்து கண்களின் மீது வைத்து துணியால் இரவு படுக்கும்போது கட்டி காலையில் எடுத்து விட்டு நல்ல நீரால் கண்களை கழுவினாலும் கண்வலி குணமாகும்.

இதையும் படியுங்கள்:
இரத்த அழுத்தத்தைக் குறைத்து சமநிலைப்படுத்தும் தயிர்!
Medicinal properties of tamarind

புளியங்கொட்டை தோலுடன் கருவேலம்பட்டை தூள் கலந்து உப்பு சேர்த்து பல் தேய்த்து வர பல்லாட்டம், பல் கூச்சம், ஈறுகளில் இரத்தம் வருதல், பல் ஈறு வீக்கம் போன்றவை குணம் பெறும். புளியங்கொட்டையை வறுத்து ஊறவைத்து அதை சாப்பிட்டால் நீர் சுருக்கு போகும். புளியங்கொட்டை தோல், மாதுளம் பழத்தோலை உலர்த்தி தனித்தனியே தூளாக்கி, சலித்து கலந்த ஒரு ஸ்பூன் தூளை பாலில் கலந்து சாப்பிட சீதபேதி குணமாகும். அதையே வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் வயிற்று பொருமல், பேதி வாந்தி குணமாகும். புளி கரைசலுடன் உப்பு, பிரண்டை சாறு கலந்து கொதிக்க வைத்து அந்தத் தைலத்தை வீக்கத்தின் மீது தடவினால் வீக்கம் குறையும்.

இதுபோல் புளியின் ஒவ்வொரு பாகமும் மருத்துவ குணம் உடையது. ஆகையால், தேவையான பொழுது இதன் மருத்துவ பயன்களை பெற்று ஆரோக்கியம் காப்போம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com