மருத்துவ குணம் கொண்ட ஓரிதழ்த்தாமரை !

Orithalthamarai plant
Orithalthamarai plant

ரிதழ்த்தாமரை குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. வயல்வெளிகள், பாழ் நிலங்கள், களர் நிலங்களிலும் சாதாரணமாகக் வளரும். ஈரப்பதம் மிக்க இடங்களில் வளரும். இது நீளமான இலைகளை உடையது. ஓரிதழ்த்தாமரை இலைகள் மாற்றடுக்கில் அமைந்தவை. இது சிவப்பு ரோஜா இதழ் நிறமான பூக்களைக் கொண்டது, மற்றும் நடுவில் நாமம் போன்றும் காணப்படும். இதன் காய் ஒற்றைக்கல் மூக்குத்தி போன்று இருக்கும். பெரும்பாலும் ½ அடிக்கும் குறைவாக வளரும்.

ஓரிதழ்த்தாமரை பெயர் காரணம்

ஒரே இதழை கொண்ட பூ என்பதால், ‘ஓரிதழ்’ என்றும், தாமரைப் பூவின் நிறத்தோடு ஒத்து உள்ளதால் தாமரை என்ற இரண்டு சொற்களும் இணைந்து ஓரிதழ்தாமரை என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது.

ஓரிதழ்த்தாமரை வேறு பெயர்கள்

ஓரிதழ்த்தாமரைக்கு சூர்யகாந்தி, ரத்தினபுருஷ், ரத்னாயுரஷரி ஆகிய வேறு இந்த தாவரத்திற்கு உண்டு. ஓரிதழ்த்தாமரை இலைகளை வாயிலிட்டு மென்றால் அவை கொழகொழப்பான பசைபோல மாறும்.

ஓரிதழ்த்தாமரையில் பயன்படும் பாகங்கள்

ஓரிதழ் தாமரையின் இலை, தண்டு, பூ, வேர், காய் உட்பட முழுச் செடியுமே ஏராளமான மருத்துவக்குணம் கொண்டது.

ஓரிதழ்த்தாமரை மருத்துவ பயன்கள்

இளைத்த உடலை வலுபடுத்தும் ஓரிதழ்தாமரை ஒரு காயகல்ப மூலிகை. முழு தாவரமும் உடலில் வெப்பத்தை நீக்குகிறது; சிறுநீர் கழிப்பதை அதிகரிக்கிறது. ஓரிதழ்தாமரை மயக்கமடைவதை நிறுத்தவும், மேகமூட்டத்திற்கான சிகிச்சையிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. மெலிந்த உடலை வலுப்படுத்த ஓரிதழ்தாமரை டானிக்குகள் மற்றும் மாத்திரைகளில் சேர்க்கப்படுகிறது.

நரம்புத்தளர்ச்சி மற்றும் எரிச்சல் நீங்கும்

முழுத்தாவரத்தையும் பச்சையாகப் பறித்து, பேஸ்ட் போல செய்து, 1 கப் காய்ச்சாத பசும்பாலில் தினமும் ஒரு எலுமிச்சை பழ அளவு கலந்து குடிக்க வேண்டும். சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் நரம்புத் தளர்ச்சி மற்றும் எரிச்சல் நீங்க 48 நாட்கள் தொடர்ந்து இதைச் குடித்து வர வேண்டும்.

இளமையை தக்கவைக்கும்

பொருளாதார பிரச்சனைகள், உணவு முறை, சமூக சூழல் காரணமாக சில இளைஞர்களுக்கு சிறு வயதிலேயே முதியவர்கள் போன்ற தோற்றம் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் இதே ஓரிதழ் தாமரை, கீழாநெல்லி உருண்டைகளைச் சாப்பிட்டு வந்தால் முதுமை தோற்றம் நீங்கி இளமையோடு இருக்கலாம்.

வெள்ளைப்படுதல் குணமாகும்

வெள்ளைப்படுதல் குணமாக ஓரிதழ்த்தாமரை இலை, கீழாநெல்லி இலை, யானை நெருஞ்சில் இலை ஆகியவற்றைச் சமமாக, ஒருபிடி அளவு எடுத்து, அரைத்துப் பசையாக்கி, 1 டம்ளர் தயிருடன் சேர்த்துக் கலக்கி, காலையில் மட்டும் குடித்துவர வேண்டும். 10 நாட்கள் வரை தொடர்ந்து இவ்வாறு செய்யலாம். அந்த நேரங்களில் காரம், புளிப்பு அதிகம் இல்லாத உணவாக உட்கொள்ள வேண்டும்.

புண்கள் மற்றும் காயங்களை ஆற்றும்

புண்கள் மற்றும் காயங்கள் ஆறுவதற்கு, முழு செடியுடன் சிறிதளவு பச்சை கற்பூரம் மற்றும் கோரோசனை (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) கலந்து பேஸ்ட் போல செய்து, நெய்யில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்.

எடையை குறைக்க உதவும்

ஒரிதழ்த்தாமரையை கஷாயம் போல செய்து சாப்பிட்டு வர ஆஸ்துமா நோயாளிகளுக்கும் நல்ல நிவாரணம் கிடைக்கும். எடை குறைக்க வேண்டும் என்று நினைபவர்கள் இந்த கஷாயத்தை அருந்தி வரலாம்.

ஆரோக்கியத்தை மீட்டெக்கும்

தாது உருவாக்கும் தனி மேகத்தை நீக்குகிறது…. ஓரிதழ்த் தாமரையுன்” இளமைப் பருவத்தில் கட்டுக்கடங்காத காம நினைவுகளால் உடல்ரீதியாக அவர்கள் செய்யும் சில செயல்களால் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகும். இதனால் உடல் மெலிந்து போன இளைஞர்களின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் ஆற்றல் ஓரிதழ்தாமரைக்கு உண்டு என்பதை நமது மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன.

ஆண்மையை பெருக்கும்

ஓரிதழ்தாமரை செடியில் செய்யப்பட்ட முதற்கட்ட ஆய்வுகளில் இது ஆண்களுக்கு விந்துச்சுரப்பைத் தூண்டி தாம்பத்திய உறவில் உள்ள ஈடுபாட்டை அதிகப்படுத்துவதாக தெரியவந்துள்ளது. ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை, தாம்பத்தியத்தில் ஈடுபட இயலாமை போன்ற பிரச்சனைகளுக்கு இந்த ஒரிதழ்தாமரை நல்ல பலன் தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com