ஒற்றைத் தலைவலி – காரணங்கள், அறிகுறிகள் மற்றும் வீட்டு வைத்தியங்கள்!

Migraine – Causes, Symptoms and Home Remedies
Migraine – Causes, Symptoms and Home Remedieshttps://tamil.boldsky.com

னைவருக்கும் பொதுவான பிரச்னையாக தலைவலி இருக்கிறது. ஆனால், ஒற்றைத் தலைவலி பலருக்கு நிறைய சிக்கல்களைத் தருகிறது. பெண்களுக்கு ஒற்றைத் தலைவலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதற்கான காரணங்கள் அறிகுறிகள் மற்றும் தீர்வுகள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஒற்றைத் தலைவலிக்கான காரணங்கள்: தலைவலி வருவதற்கான காரணங்கள் பல உண்டு. வீட்டில் தொலைக்காட்சியின் சத்தத்தை அதிகப்படுத்தினாலே சிலருக்கு ஒற்றைத் தலைவலி வரலாம். சத்தம் போட்டு மனிதர்கள் பேசுவது, ஒளி மிகுந்த விளக்குகள், கடுமையான வாசனை வீசும் பெர்ஃப்யூம்கள், காபி அதிகமாக குடிப்பது, சரியான நேரத்தில் உணவு உண்ணாமல் இருப்பது, பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், வானிலையில் திடீரென மாறுதல்கள் ஏற்படுவது, அதிகப்படியான உடல் உழைப்பு, புகையிலைப் பயன்பாடு, குறைவான அல்லது அதிகப்படியான தூக்கம், அதிகப்படியான மருந்து பயன்பாடுகள், வலி நிவாரணிகளை அதிகமாக உபயோகிப்பது, கவலை மற்றும் மன அழுத்தம் போன்றவை ஒற்றைத் தலைவலி வருவதற்கான காரணங்கள்.

ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகள்: ஒற்றைத் தலைவலி வந்தால் நெற்றியின் இரண்டு பக்கமும் துடிப்பது போன்ற உணர்வு இருக்கும். முதலில் லேசாகத் தொடங்கும் இந்த வலி, கடுமையானதாக மாறும். ஒரு நாளிலிருந்து இரண்டு நாட்கள் வரையை கூட இது நீடிக்கும்.

குமட்டல் மற்றும் வாந்தி, வயிற்று வலி, சோர்வு, தலையின் இரண்டு பக்கமும் சுத்தியல் கொண்டு அடிப்பது போன்ற உணர்வு இருக்கும். மிக அரிதாக காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு வரும்.

தலைவலிக்கான வீட்டு வைத்தியம்:

1. ஒற்றைத் தலைவலியை குறைப்பதில் இஞ்சி பெரும் பங்கு வகிக்கிறது. இதில் உள்ள பல பைட்டோ கெமிக்கல்கள் ஒற்றைத் தலைவலியை குறைக்கிறது. ஒரு டம்ளர் நீரில் ஒரு துண்டு இஞ்சி தட்டிப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து குடித்தால் தலைவலி மட்டுப்படும்.

2. புதினா இலைகளை சுத்தம் செய்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து குடித்தால் தலைவலி குறையும்.

இதையும் படியுங்கள்:
மன வலிமை உள்ளவர்கள் கைக்கொள்ளாத விஷயங்கள் என்ன தெரியுமா?
Migraine – Causes, Symptoms and Home Remedies

3. திருநீற்றுப் பச்சிலை இலைகளை அரைத்து நெற்றியின் இருபுறமும் பற்று போட்டால் வலி குறையும். ஈரத் துணியை நெற்றின் மீதும், கழுத்தின் மீதும் சிறிது நேரம் வைத்திருந்து எடுத்தால் வலி குறையும்.

4. தியானம் செய்வதும், மூச்சுப் பயிற்சியும் ஒற்றைத் தலைவலியை குறைக்கும். நிறைய தண்ணீர் குடிப்பதும் நல்ல பலன் தரும்.

5. பொதுவாக, மன அழுத்தம் காரணமாகவே ஒற்றைத் தலைவலி வருகிறது. எனவே, கவலைகளை தூர போட்டுவிட்டு சிறிது நேரம் நன்றாகத் தூங்கி ஓய்வெடுக்க வேண்டும். அப்போது அறையை இருட்டாக்கி சத்தங்கள் ஏதும் தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com