குணப்படுத்த முடியாத மைக்ரேன் பிரச்சனை!

குணப்படுத்த முடியாத மைக்ரேன் பிரச்சனை!
Published on

ன்று பெரும்பாலான மக்கள் தலைவலியால் அவதிப்பட்டு வருகின்றனர். மைக்ரேனிற்கு முக்கிய காரணங்கள் தூக்கமின்மை, வெகுநேரம் ஈரத்தலையுடன் இருத்தல், மதிய வெயிலில் சூரிய ஒளி நேராக  கண்ணில் படும்படி நிற்பது, மன அழுத்தம், ஓய்வில்லாமல்  வெகு நேரம் வேலைப் பார்ப்பது, அதிக ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுதல் கூட மைக்ரேன் வலியை உண்டாக்கும்.

முன்பக்க தலைவலி, பின் மண்டை தலைவலி, இரண்டு பக்கமும் தலைவலி என பலவித தலைவலிகள் இருந்தாலும் மைக்ரேன் தலைவலியே மிக மோசமான ஒன்றாகும். இந்த வலி வந்தால் சிலருக்கு வந்த சிறிது நேரத்திலையே சென்றுவிடும், சிலருக்கு இரண்டு மணி நேரம் எடுத்துக்கொள்ளும் மற்றும் சிலருக்கு காலை வரை நீடிக்கும். இந்த வலி எத்தனை மணி நேரம் வந்தாலும் சரி அது செல்வதற்குள் நரகத்திற்கே சென்றுவிட்டு வருவார்கள்.

மைக்ரேன் அறிகுறிகள்:

லவிகை தலைவலிகள் இருப்பதால் , எது சாதாரண வலி? எது மைக்ரேன் வலி ? என்பது குழப்பமாக இருக்கும். சிலர் கண்களுக்குத்தான் பிரச்சனை என்று நினைத்துக் கொண்டு கண் மருத்துவமனைக்கு செல்வார்கள். சிலர் சாதாரண தலைவலி என்று நினைத்துக்கொண்டு கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவார்கள்.ஆனால் மைக்ரேன் தலைவலிக் கென்று சில அறிகுறிகள் இருக்கிறது.

முதலில் மெதுவாக வலித்தாலும் போகப் போக பார்வை மங்கும், வாந்தி வருவது போல் இருக்கும், முதுகில் யாரோ குத்துவது போல் இருக்கும், மயக்க நிலையில் தான் இருப்பார்கள். காலை வரை அந்த மயக்க நிலை நீடிக்கும்.

கிளாசிக்கல் மைக்ரேன் தலைவலி வரும்போது கண்ணுக்கு முன்னாடி பூச்சிப் பறப்பது போன்ற உணர்வு இருக்கும், சில நேரங்களில் கலர் கலரான வண்ணங்கள் போன்ற பின்பம் தோன்றும்.  

நியூராலஜிக் மைக்ரேன் என்பது தலை வலியுடன் சேர்த்து ஒருப்பக்க கை கால்களும் வலி எடுக்கும். இதனை பற்றி மருத்துவர்கள் கூறியது என்னவென்றால். நமது வலது பக்க மூளை இடதுபக்கம் உள்ள கை கால்களை கண்ட்ரோல் செய்கிறது. இடது பக்க மூளை வலதுபக்கம் உள்ள கை கால்களை கண்ட்ரோல் செய்கிறது. மைக்ரேன் என்பது ஒருபக்க வழி என்பதால் எந்த பக்கம் வலி எடுக்கிறதோ அந்த பக்கத்தின் நேர்மாறான பக்கம் உடம்பு வலியெடுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். 

இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் அது மைக்ரேன் தலைவலி என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

மைக்ரேன் வலியில் இருப்பவர்கள் செய்யவேண்டியவை:

தூக்கமின்மையால் வரும் மைக்ரேன் வலியை போதுமான தூக்கத்தினாலையே சரி செய்துகொள்ளலாம்.

 இந்த பிரச்சனையில் உள்ளவர்கள் நேரடியாக வெயிலில் செல்லும்போது கண்களுக்கு சூரிய ஒளிப்படாமல் தவிர்க்க சன் கிளாஸ் அணிந்து கொள்ளவேண்டும்.

சில காய்கறிகள் சாப்பிட்டபின்னர் பாதிப்பு ஏற்பட்டால் அந்த குறிப்பிட்ட காய்கறிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

மைக்ரேன் தலைவலியில் இருப்பவர்களுக்கு அதிகப் படியான சாக்லெட், சீஸ், அதிக அளவு காபி , அதிக அளவு வாழைப்பழம் போன்றவைக்கூட தலைவலியை அதிகரிக்கும்.

வெகு நாட்கள் தூக்கமின்றி ஓய்வின்றி வேலைப் பார்ப்பவர்களுக்கு மைக்ரேன் நோய் வந்தால், உடனே வேலையை அப்படியே விட்டுவிட்டு ஒரு இருட்டு அறையில் நன்றாக உறங்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com