Moringa flower
Moringa flower Img Credit: Lifeandtrendz

முருங்கைப் பூவும் அதன் 10 நன்மைகளும்!

Published on
  • கம்ப்யூட்டர்,மொபைல், லாப்டாப் போன்றவற்றை நீண்ட நேரம் பார்த்து கொண்டிருப்பதால் கண்கள் விரைவில் வறண்டு விடும். கண் இமைகளின் சிமிட்டும் தன்மை குறைந்துவிடும். இதனால் தலைவலியும், பார்வை மங்கலும் ஏற்படும். இப்பிரச்சனைகளுக்கு முருங்கைப்பூவுடன் பால் சேர்த்து காய்ச்சி காலை மாலை இருவேளை சாப்பிட்டு வர கண்களில் ஈரப்பசை அதிகரித்து கண் பார்வை கோளாறுகளை சரிசெய்யும்.

  • வெள்ளெழுத்து உள்ளவர்கள் முருங்கைப்பூ பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.

  • அதிக வேலைப்பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும். முருங்கைப்பூ கஷாயமாக்கி வாரம் இருமுறை அருந்திவர நரம்பு தளர்ச்சி நீங்கும்.

  • நீரிழிவு நோயாளிகளுக்கு முருங்கைப்பூவை உணவில் தாராளமாக சேர்த்து கொள்ள நீரிழிவு பாதிப்புகள் நீங்கும்.

  • சில பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடிவயிற்று வலி என பல விதங்களில் கஷ்டப்படுவார்கள். இவர்கள் முருங்கைப்பூ கஷாயத்தை தொடர்ந்து எடுத்துக் கொள்ள மேற்சொன்ன உபாதைகள் குறையும்‌.

இதையும் படியுங்கள்:
கோடை வெப்பம் என்னென்ன செய்யும் தெரியுமா? ஜாக்கிரதை மக்களே!
Moringa flower
  • மன உளைச்சல், பயம், மன அழுத்தம் போன்ற பிரச்சனை உள்ளவர்களும் முருங்கைப்பூவை ஏதோ ஒரு வகையில் எடுத்துக் கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.

  • முருங்கைப்பூவுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர ஆண்மைக் கோளாறுகள் நீங்கும்‌.

  • முருங்கைப்பூ கஷாயம் சூட்டைத் தணிக்கும்‌. குழந்தைகளுக்கு நினைவாற்றல் பெருகும்.

  • முதியோருக்கு வரக்கூடிய ஞாபகமறதியை தடுக்கும். முருங்கைப்பூ பால் பலவிதமான உடல்நலக் கோளாறுகளை சரிசெய்யும். முருங்கை சூப் சளித் தொல்லைகளை சரியாக்கும்‌

  • இவ்வாறு பல்வேறு நன்மைகளை கொண்ட முருங்கைப்பூவை உணவில் சேர்த்துக் கொள்ள மூட்டுகளுக்கு மற்றும் உடல்நலத்துக்கு நன்மை பயக்கும்.

logo
Kalki Online
kalkionline.com