

2017 ஆம் ஆண்டு, தீபம் இதழில், 'முத்திரை பயிற்சி’ என்ற தலைப்பில் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான உணவு பிடிக்கும். உதாரணமாக ஒருவருக்கு லட்டு பிடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அது ஏன் அவருக்குப் பிடித்தது?
லட்டின் சுவையை அவரது நாக்கும், சுவை நரம்புகளும் அவருக்கு உணர்த்துகின்றன. உடனே அந்த எண்ணத்தை புத்தி உள்வாங்கி மனமானது சந்தோஷப்படுகிறது. மொத்த உடலும் அந்த சந்தோஷத்தை அனுபவிக்கிறது.