நுரையீரல் பிரச்னையை தீர்க்கும் நறுவல்லி பழம்!

நறுவல்லி பழம்
நறுவல்லி பழம்
Published on

ந்தியாவில் மருத்துவ குணங்களும் ஊட்டச்சத்துகளும் நிறந்த பல அரிதான பழங்கள் கிடைக்கின்றன. அப்படியொரு சத்து நிறைந்த சிறிய பழம்தான் நறுவல்லி. Cordia myxa என அறிவியல் பெயர் கொண்ட இந்தப் பழம் வெவ்வேறு மாநிலங்களில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

இது நறுவல்லி என்றும் மூக்குச்சளி பழம் என்றும் அழைக்கப்படுகிறது. குறிப்பாக, ராஜஸ்தான், தமிழ்நாடு மாநிலத்தில் மட்டுமல்லாமல் தாய்லாந்து, சிரியா போன்ற நாடுகளிலும் அதிகமாக இந்த நறுவல்லி மரத்தையும் பழத்தையும் பார்க்கலாம்.

சிறு வயதில் பள்ளியில் படிக்கும்போது இந்தப் பழத்தை நாம் எல்லாருமே சாப்பிட்டிருப்போம். வழுவழுவென்று இருக்கும் இந்தப் பழத்தை அடுத்தவர்கள் மீது தூக்கி வீசினால் ஒட்டிக்கொள்ளும் தன்மையுடையது. சாலையோரத்திலும் காட்டுப் பகுதியிலும் இம்மரத்தினை அதிகமாக பார்க்கலாம். நறுவல்லி பழம் ஆரஞ்சு அல்லது பிங்க் நிறத்தில் இருக்கும். இந்தப் பழத்தில் நிறைய ஊட்டச்சத்துகளும் மருத்துவ குணங்களும் உள்ளன. பல்வேறு நோய்களை குணப்படுத்தும் வல்லமை நறுவல்லி பழத்தில் உள்ளது. பார்ப்பதற்கு வட்ட வடிவில் சிறிதாக இருக்கும் நறுவல்லி பழத்தை ஊறுகாயாகவோ பொடியாகவா அல்லது நேரடியாக பழமாகவோ சாப்பிடலாம்.

இந்தப் பழத்தில் வைட்டமின், மினரல், ஆண்டி ஆக்ஸிடன்ட் அதிகமுள்ளது. நமது செரிமானத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவுவதோடு உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி சரும நோய்கள், ஆஸ்துமா, இருமல் போன்வற்றுக்கும் இந்த பழம் நிவாரணம் அளிக்கிறது.

இதையும் படியுங்கள்:
தொப்பையை குறைக்கும் 5 இயற்கை ஆரோக்கிய பானங்கள்!
நறுவல்லி பழம்

ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் பெருவாரியாக பயிரிடப்படும் நறுவல்லி பழம், இரண்டு மாதங்கள் மட்டுமே கிடைக்கும் என்பதால் ஒரு கிலோ 180 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மேலும் நறுவல்லி பழம் மட்டுமல்லாமல், அம்மரத்தின் மரக்கிளைகள் விறகாகப் பயன்படுவதோடு அதன் இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுகின்றன.

இதற்கிடையில் நாளுக்கு நாள் இந்தப் பழத்திற்கான தேவை மக்களிடம் அதிகரித்து வருவதையும் பார்க்க முடிகிறது. ஒரு காலத்தில் யாருமே கண்டுகொள்ளாமல் இருந்த நறுவல்லி பழம், இந்தியாவின் பல்வேறு வகைப்பட்ட அரிய பழங்களின் நிலப்பரப்பில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com