
‘கீல்வாதம்’ (Arthritis) எனப்படும் வலியுடைய மூட்டு வீக்கம் நோயால் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் இந்த நோயிலிருந்து விடுபட உண்ண வேண்டிய சில உணவுகள் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
வால்நட், ஃபிளாக்ஸ் ஸீட்ஸ், சியா ஸீட்ஸ் போன்ற ஒமேகா 3 என்னும் நல்ல கொழுப்பு அமிலம் அடங்கிய உணவுகள் கீல்வாத வீக்கத்தைக் குறைக்கும் வல்லமையுடைய விதைகள்.
ப்ளூ பெர்ரி, ஸ்ட்ரா பெர்ரி, பிளாக் பெர்ரி போன்ற பழங்களில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் மூட்டு வலி வீக்கத்தைக் குறைக்க உதவும்.
க்ரீன் டீயில் உள்ள பாலிஃபினால்ஸ் என்ற பொருள் கால் மூட்டு வீக்கத்தைக் குறைக்க உதவும் காரணியாய் உள்ளதால் இதுவும் அருந்துவதற்கு ஏற்றது.
எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெயில் உள்ள ஒற்றை நிறைவுற்ற நல்ல கொழுப்பும் (monounsaturated fat) ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்களும் மூட்டு வலி வீக்கத்தை குறைத்து வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
ப்ரோக்கொலியிலுள்ள அதிகளவு வைட்டமின் Kயும், Cயும், சல்ஃபோராஃபேன் என்னும் வேதிப்பொருளும் வீக்கத்தைக் குறைத்து கீல்வாத நோயின் தன்மை அதிகரிக்காமல் பாதுகாக்க உதவுகிறது.
பசலைக்கீரை மற்றும் பச்சை இலைக் காய்கறியும் தன்னகத்தே கொண்டுள்ள அதிகளவு ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்களால் மூட்டு கீல்வாத வீக்கத்தைக் குறைக்கின்றன.
பூண்டு மூட்டு கீல்வாத வீக்கத்தைக் குறைப்பதுடன் குருத்தெலும்புத் தேய்மானத்தை தாமதப்படுத்துகிறது.
மேலே கூறிய உணவுகளை அடிக்கடி தினசரி உணவில் சேர்த்துக்கொண்டு கீல்வாத நோயின் வீரியத்திலிருந்து விடுபட்டு நலமுடன் வாழ்வோம்.