வாய்விட்டு மிகவும் பிரகாசமாக சிரிப்பது, உங்களது தன்னம்பிக்கையை அதிகரித்து மற்றவருக்கு உங்களை கவர்ச்சிகரமாக காட்ட உதவும். இருப்பினும் நீங்கள் உங்களது வாய் சுகாதாரத்தில் கவனம் செலுத்தவில்லை எனில், பற்கள் கரை படிந்து அவற்றின் இயற்கையான வெண்மை நிறத்தை இழக்கலாம். இதனால் பற்கள் மஞ்சள் நிறத்திற்கு மாறி, உங்களது தன்னம்பிக்கையை வெகுவாக பாதிக்கும். இதை சரி செய்வதற்கு விலை உயர்ந்த சிகிச்சை முறைகளை நாடாமல் வீட்டில் இருந்தபடியே மஞ்சள் பற்களை வெண்மையாக மாற்ற முடியும்.
ஆரோக்கியமான வெள்ளை நிற பற்களுக்கு முதலில் சரியான வாய் சுகாதாரத்தை பராமரிப்பது முக்கிய சரியான பேஸ்ட் மற்றும் மென்மையான பிரஷ் பயன்படுத்தி ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பல் துலக்கங்கள். வாயில் உள்ள பாக்டீரியாக்களை அகற்ற நாக்கை சுத்தம் செய்ய மறக்காதீர்கள். உங்கள் பற்களுக்கு இடையே உள்ள பிளேக் மற்றும் உணவுத் துகள்களை தினமும் அகற்றுங்கள்.
பேக்கிங் சோடா இயற்கையான வெண்மையாக்கும் பண்புகளை கொண்டுள்ளது. மேலும் ஹைட்ரஜன் பெராக்சைடு வெண்மையாக்கும் பொருட்களில் பொதுவாகவே பயன்படுத்தப்படுகிறது. எனவே உங்கள் பற்களை சுத்தப்படுத்த சிறிதளவு ஹைட்ரஜன் பெராக்சைடுடன் சிறிதளவு பேக்கிங் சோடா கலந்து பேஸ்ட் போல உருவாக்கி மெதுவாக பற்களில் தேய்த்த பின்னர் உடனடியாக கழுவிவிடவும்.
பற்களை சுத்தம் செய்ய ஆயில் புல்லிங் எனப்படும் பண்டைய ஆரையூர்வேத நடைமுறையை பின்பற்றலாம். இது உங்கள் வாயிலிருந்து நச்சுக்கள் மற்றும் பாக்டீரியாக்களை அகற்ற உதவி, வாய் ஆரோக்கியத்தை மீட்டெடுத்து, பற்களை வெண்மையாக்க உதவுகிறது. ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் எடுத்து, வாயில் சுமார் 15 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு துப்பவும். பின்னர் வெந்நீர் பயன்படுத்தி வாயை கழுவவும்.
அடுத்ததாக ஒரு பழுத்த ராஸ்பெரியை மசித்து அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் உருவாக்கவும். இந்த பேஸ்ட்டை பற்களில் தடவி 5 நிமிடங்கள் வீட்டு பின்னர் கழுவவும். இதை செய்ததும் மீண்டும் பிரஷ் பயன்படுத்தி பல் துலக்க வேண்டும்.
ஆப்பிள், கேரட் போன்ற முறுமுறுப்பான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது இயற்கையான முறையில் பற்களை சுத்தம் செய்யும். அவை பற்களுடன் நன்றாக உரசி மேற்பரப்பில் உள்ள கரை மற்றும் பிளேக்கை அகற்ற உதவுகிறது. கூடுதலாக, அவை உமிழ்நீர் உற்பத்தியை அதிகரிப்பதால், வாயில் உள்ள அமிலத்தன்மை நடுநிலையாகி வாய்வழி ஆரோக்கியத்தை பெரிதளவில் பராமரிக்கிறது.
இந்த முறைகளை பின்பற்றி வாய் சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்தினால், கொஞ்சம் கொஞ்சமாக உங்களது மஞ்சள் நிற பல் இயற்கையான வெண்மை நிறத்திற்கு மாற ஆரம்பிக்கும். இத்தகைய நிறமாற்றம் உடனடியாக நடந்துவிடாது. இதற்கு சில காலம் பிடிக்கலாம். உங்களுக்கு உடனடியாக மாற்றம் தேவை என்றால், தகுந்த பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.