மன அழுத்தத்தை போக்கும் ஒன்பது வகையான உணவுகள்!

stress-relieving foods
stress-relieving foodsImg Credit: Freepik

பல்வகை ஊட்டச் சத்துக்கள் நிறைந்த சரிவிகித உணவை உட்கொண்டு நம் உடலை எவ்வளவு ஆரோக்கியம் நிறைந்ததாக வைத்திருந்தாலும் நம் மனநிலை சரியில்லையென்றால் நம் உடல் அன்றாட வேலைகளை சரிவரச் செய்வதற்கு ஒத்துழைப்பு தராது.

எனவே உடல் நலம் மன நலம் இரண்டும் சமநிலையில் இருக்கும்போது தான் முழுமை பெற்ற ஆரோக்கியம் கிடைக்கும். மனநிலையை சமநிலைப்படுத்தி பராமரிக்கத் தேவைப்படும் ஒன்பது வகை உணவுகளைப் பற்றி இங்கு காண்போம்.

  • டார்க் சாக்லேட்டை நாம் உண்ணும்போது அதிலுள்ள ஒரு கூட்டுப்பொருளானது என்டோர்ஃபின்களை உற்பத்தி செய்து வெளியேற்றுகிறது. இந்த என்டோர்ஃபினானது மனதிலுள்ள வலிகளைக் குறைத்து சந்தோசமான மனநிலையை உருவாக்குகிறது.

  • அவகாடோ பழத்திலிருக்கும் வைட்டமின் B 6 செரோடோனின் என்ற பொருளை உற்பத்தி செய்கிறது. அதிலிருக்கும் நரம்பியக்கடத்திகள் (neurotransmitters) மனநிலையை மகிழ்ச்சியாக்க உதவுகிறது.

  • ப்ளூ பெரியில் அதிகளவில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்களானது மன அழுத்தம் தரக்கூடிய தீய சக்திகளை எதிர்த்துப் போராடும் குணம் கொண்டவை.

  • சால்மன் மீனில் நிறைந்துள்ள ஒமேகா 3 என்னும் கொழுப்பு அமிலங்கள் வீக்கத்தைக் குறைத்து சந்தோசமான மனநிலையைத் தருகிறது.

  • பசலை, காலே போன்ற கீரை வகைகளில் அடங்கியிருக்கும் அதிகளவு வைட்டமின் மற்றும் தாதுச் சத்துக்கள், உடலானது மன அழுத்தம் மற்றும் வேதனைகளுக்கு இடம் கொடுக்காமல் பாதுகாக்கிறது.

  • ப்ரோபயோடிக் நிறைந்துள்ள கிம்ச்சி (kinchi), சார்க்ராட் (Sauerkraut), கேஃபிர் (kefir) போன்ற நொதிக்கச் செய்த உணவு வகைகள் உண்பதால் உடல் மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்காத மேன்நிலை அடைகிறது.

இதையும் படியுங்கள்:
அரிசித் தண்ணீரில் இத்தனை நன்மைகள் இருக்கா?
stress-relieving foods
  • உலர் பழங்கள் மற்றும் கொட்டைகளிலிருக்கும் மக்னீசியம் சத்தானது மன அழுத்தத்தைக் குறைத்து உடல் தளர்ச்சியுற்று சந்தோசமான மனநிலை பெற உதவிபுரிகிறது.

  • வாழைப்பழங்களிலிருக்கும் வைட்டமின் B6 மற்றும் செரோடோனினானது மன அழுத்தம் நீக்கி நல்ல மூடுக்கு மனதை கொண்டு செல்ல உதவுகின்றன.

மேற்கூறிய உணவு வகைகளை தினசரி உட்கொண்டு நம் உடலை மட்டுமல்லாது மனதையும் ஆரோக்கியம் நிறைந்ததாய் வைப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com