ஜலதோஷம், தலைவலிக்கு கைக்கண்ட நிவாரணியாகும் நொச்சி இலை!

ஜலதோஷம், தலைவலிக்கு கைக்கண்ட நிவாரணியாகும் நொச்சி இலை!

ளி, ஜலதோஷத்துக்கெல்லாம் இக்காலத்தில் மருத்துவரிடம் செல்லும் வழக்கம் வந்துவிட்டது. அக்காலங்களில் வீட்டுக்கு அருகில் கைக்கெட்டும் தொலைவிலேயே இதற்கு நிவாரணம் தரும் மருத்துவப் பொருட்கள் கிடைத்தன. ஆம், மேற்சொன்ன உடல் பிரச்னைகளுக்கு பெரும் நிவாரணம் தருபவையாக நொச்சி இலைகள் திகழ்ந்தன. நொச்சி இலைகளின் பயன்களை அளவிட முடியாது.

நொச்சியில் கருநொச்சி, நீல நொச்சி, நீர் நொச்சி, வெண்ணொச்சி என நான்கைந்து வகைகள் உள்ளன. இதில் கருநொச்சி மிகப்பெரும் மருத்துவ நிவாரணியாக விளங்குகிறது. ஜலதோஷம், தலைவலி என்றால் ஒரு கொத்து நொச்சி இலையை பறித்து நீரில் அலசி வைத்து விட்டு, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து, கொதித்ததும் இறக்கி இந்த இலைகளை கையால் கசக்கி அதில் போட்டு ஆவி பிடிக்க, தலைவலி, ஜலதோஷம், தலைபாரம் எல்லாம் காணாமல் போய்விடும்.

அதேபோல் தலைவலி, தலைபாரம் என்றால் நொச்சி இலைகளை எரித்து அதன் புகையை சுவாசிக்க நன்கு குணம் தெரியும். நுரையீரல் பிரச்னைகளுக்கு சிறந்த மூலிகை இந்த நொச்சி இலைதான். ஐந்து நொச்சி இலைகள், சிறிது மிளகு, கிராம்பு ஒன்று ஆகியவற்றை வதக்கி நீர் விட்டு கொதிக்க விட்டு வடிகட்டி கஷாயமாக குடிக்கலாம். நொச்சி இலைகள் ஆஸ்துமாவை கூட விரட்டக்கூடிய சக்தி கொண்டது.

நொச்சி இலைகளை அரைத்து சாறு எடுத்து அதை நல்லெண்ணையுடன் சேர்த்து காய்ச்சி சிறிது ஆறியதும் தலையில் தேய்த்து, உடலிலும் தேய்த்து குளிக்க உடல் வலி, சுளுக்கு, கழுத்து வலி போன்றவை சரியாகும். கை, கால் முட்டி வலிக்கு இந்த இலைகளை சிறு மூட்டையாக கட்டி சூடான வாணலி அல்லது தோசை கல்லில் வைத்து எடுத்து ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் குறையும்.

நொச்சி இலை சாறு எடுத்து முகத்தில் பருக்கள், தேமல் உள்ள இடங்களில் தடவி வந்தால் பருக்கள், தேமல் ஆகியவை மறைந்துவிடும். நொச்சிப்பூ குளிர்ச்சியை உண்டாக்கும். நொச்சி வேர் காய்ச்சலை கட்டுப்படுத்தும். சிறுநீரை பெருக்கும். மூட்டு வலி, இடுப்பு வலி, வீக்கம் ஆகியவற்றுக்கும் நொச்சி வேர் சிறந்தது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com