நோய் தீர்க்கும் கஷாயங்களும், தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகளும்!

Kashayam
Kashayamhttps://www.herzindagi.com

ண்டைய காலங்களில், மக்கள் பெரும்பாலான நோய்களுக்கு வீட்டு வைத்தியம் மூலம் மட்டுமே சிகிச்சை அளித்தனர். இந்த வீட்டு வைத்தியத்தில் வீட்டில் தயாரிக்கப்பட்ட கஷாயம் குறிப்பிடத்தக்கது. இன்றும் பல வீடுகளில் உள்ளவர்களிடம் சிறு சிறு உடல்நலக் குறைவுகளுக்கு கஷாயம் குடிக்கும் பழக்கம் உள்ளது. இருமல், சளி அல்லது அசிடிட்டி பிரச்னையாக இருந்தாலும், கஷாயம் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. சிலர் உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க கஷாயத்தை உட்கொள்கின்றனர்.

உங்களுக்கு இருமல் மற்றும் சளி பிரச்னை இருந்தால், இரவில் தூங்கும் முன் சிறிது கஷாயம் அருந்தலாம். இது தவிர, காலை உணவுக்குப் பிறகு அல்லது மாலை நேர சிற்றுண்டியிலும் கஷாயம் எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக, காலையில் அல்லது இரவு உணவிற்கு முன்பு கஷாயம் சாப்பிட்டு வந்தால் நல்லது.

காலையில் வெறும் வயிற்றில் கஷாயம் குடிப்பது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். குறிப்பாக, சூடான மசாலாப் பொருட்களை உட்கொள்வதால் உங்கள் செரிமானம் பாதிக்கப்படும். கூடுதலாக, வாந்தி மற்றும் குமட்டல் போன்ற பிரச்னைகளையும் நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். எனவே, காலையில் வெறும் வயிற்றில் கஷாயத்தைக் குடிப்பதைத் தவிர்க்கவும். ஆனால், சில உடல் நலக்குறைவுக்கு காலையில் வெறும் வயிற்றில் கஷாயம் குடிக்க சிபாரிசு செய்யப்படுகிறது.

ஒரு நாளைக்கு ஒரு முறை கஷாயம் குடிப்பது உங்களுக்கு பாதுகாப்பானது. குளிர்காலத்தில் நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை கஷாயத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை கஷாயம் எடுத்துக் கொண்டால், மருத்துவரை அணுக வேண்டும். கஷாயத்தை சரியாக உட்கொள்வதோடு, அதன் அளவையும் மனதில் கொள்ள வேண்டியது அவசியம். எனவே, ஒரு நேரத்தில் அரை கப்க்கு மேல் உட்கொள்ளக் கூடாது.

நமக்குத் தேவையான மூலிகைகளை மண் சட்டியில் போட்டு நான்கு மடங்கு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை ஒரு மடங்காக வற்ற வைத்து மூலிகை கஷாயம் தயாரிக்கப்படுகிறது. இவற்றைப் பருகினால் பக்க விளைவுகள் இல்லாமல் முழு பலன் கிடைக்கும்.

அருகம்புல் கஷாயம்: அருகம்புல், மிளகு, இஞ்சி இவற்றை தேவையான அளவு எடுத்து இடித்து மண் சட்டியில் போட்டு நாலு மடங்கு தண்ணீர் ஊற்றி சுண்டக் காய்ச்சி அது ஒரு டம்ளராக வற்றியவுடன் சாப்பிட இரத்தம் சுத்தமாகும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், சரும நோய்கள் வராமல் தடுக்கும்.

பித்த கஷாயம்: இஞ்சி அல்லது சுக்கு - 2 இன்ச், மல்லி விதைகள் - ஒரு ஸ்பூன், வெந்தயம் - கால் ஸ்பூன், சீரகம் - ஒரு ஸ்பூன் 2 டம்ளர் தண்ணீரில் இந்தப் பொருட்களை சேர்த்து, அந்தத் தண்ணீர் ஒரு டம்ளர் அளவு சுண்டும் வரை கொதிக்க வைத்து, தேன் மற்றும் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பருகலாம். தேன் மற்றும் எலுமிச்சை சாறு இல்லாமலும் பருகலாம். இதை தினமும் காலையில் ஒரு வாரம் வெறும் வயிற்றில் பருக வேண்டும். உங்களுக்குப் பித்தத்தால் ஏற்படும் வாந்தி, மயக்கம், சோர்வு, மலச்சிக்கல், செரிமானக் கோளாறுகள், தலைவலி, ஒற்றைத் தலைவலி, தலையில் பொடுகு பிரச்னைகளைப்போக்க இது உதவும்.

சர்க்கரை நோய் கஷாயம்: ஆவாரம் பூ, சரக்கொன்றைப்பூ, நெல்லி வற்றல், மருதப்பட்டை இவற்றை கொதிக்க வைத்து தயாரான கஷாயத்தை சர்க்கரை நோயாளிகள் காலையில் சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் வரும்.

இதையும் படியுங்கள்:
கலை மற்றும் விளையாட்டில் ஈடுபடும் மாணவர்கள் நன்றாக படிக்க மாட்டார்களா?
Kashayam

ஆஸ்துமா கஷாயம்: ஆடாதோடை, தூதுவளை, துளசி, கண்டங்கத்திரி, மிளகு இவை கொண்டு தயாராகும் கஷாயத்தை மழை காலத்தில் வாரம் இருமுறை பருகினால் மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களிலிருந்து விடுபடலாம். சுவாச மண்டல நோய் உள்ளவர்கள் இந்த கஷாயத்தை தொடர்ந்து பருகினால் அந்த பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

உடல் எடை குறைய கஷாயம்: சரக்கொன்றைப்பூ, கொள்ளு, புளி, நீர்முள்ளி போன்ற மூலிகைகளைக் கொண்டு தயாரான கஷாயத்தை காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து பருகினால் மாதம் இரண்டு கிலோ எடை குறையும். இது இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைக்கும்.

மூட்டு வலி கஷாயம்: சித்தரத்தை சூரணம் - அரை தேக்கரண்டி, சீந்தில் கொடி சூரணம் – அரை தேக்கரண்டி, சுக்கு பொடி - அரை தேக்கரண்டி இவை மூன்றையும் 200 மில்லி நீரில் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட, மூட்டு வலி, கழுத்து வலி, தோள்பட்டை மற்றும் கை, கால் என எந்த வலியாக இருந்தாலும் சரியாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com