குங்குமப்பூவின் விலை மட்டுமல்ல; அதன் மருத்துவ வீரியமும் அதிகம்தான்!

குங்குமப்பூ
Saffron
Published on

லகிலேயே மிக விலை உயர்ந்த நறுமணப்பொருள் என்றால் அது குங்குமப்பூதான். இதன் மணம் சற்றே காரமும், கசப்பும் கலந்த சுவை. உஷ்ணம் தரும் தன்மை, மகிழ்ச்சி அளிக்கும் குணம். இவற்றின் காரணமாக ஆயுர்வேத மருத்துவத்தில் இதை தேடுகிறார்கள். தொண்டை சம்பந்தப்பட்ட உபாதைகள், வாயு, இருமல், தலைவலி, வாந்தி, விக்கல் போன்றவற்றுக்கு குங்குமப்பூவை சேர்த்து மருந்து தயாரிக்கிறார்கள். குழந்தைகளின் காய்ச்சல், சிறுநீர், மலக்கழிவு சம்பந்தப்பட்ட நோய்களை குணமாக்க குங்குமப்பூ உதவுகிறது. சித்த மருத்துவம் வாதம் மற்றும் பித்த நோய்களுக்கான மருந்துகளில் குங்குமப்பூவை சேர்த்து செய்கிறார்கள்.

ஈரான் நாட்டின் டெஹாரான் பல்கலைக்கழக ஆய்வில் தெரிய வந்த உண்மைகள் குங்குமப்பூவில் குரோசின், குரோசியாட்டின், சப்ரனால் மற்றும் கேம்பெரோல் எனும் நோய் எதிர்ப்பு ஆற்றல் கொண்ட ரசாயனக் கலவைகள் உள்ளன. இவற்றில் குரோசின் மற்றும் குரோசியாட்டின் மன அழுத்தத்தை குறைக்க உதவும் மருந்தாக செயல்படுகிறது என்கிறார்கள். இது பதற்றத்தை குறைக்கிறது மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்னைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இதேபோல், குங்குமப்பூவை உட்கொள்வது டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைக்கிறது. இது கருவுறாமை பிரச்னையை நிர்வகிக்க உதவுகிறது.

சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் படபடப்பு ,எரிச்சல், தலைவலி, பிற வலிகள் ஏற்படும். இதனை பி.எம்.எஸ். என்கிறார்கள். 20 முதல் 45 வயதில் உள்ள பெண்கள் தினமும் 30 மி.கி. குங்குமப்பூவை சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சமயத்தில் வரும் பி.எம்.எஸ் அறிகுறிகள் மறையும் என்கிறார்கள். குங்குமப்பூவை 20 நிமிடங்கள் ஆழமாக நுகர்ந்தாலே பி.எம்.எஸ். அறிகுறிகள் குறையும் என்கிறார்கள்.

குங்குமப்பூவில் இருக்கும், ‘சப்ரனால்’ நினைவாற்றலை மேம்படுத்தும், மூளை செயல்பாடுகளை மேம்படுத்தி கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும். மேலும், மூளையின் செல்கள் அழிவை தடுக்கும் என்கிறார்கள். தொடர்ந்து 30 நாட்கள் 15 மி.கி. குங்குமப்பூவை சாப்பிட்டு வர அல்சைமர் நோயின் தாக்கம் குறையும் என்கிறார்கள்.

குங்குமப்பூவில் இருக்கும், ‘கேம் பெரோல்’ அழற்சி எதிர்ப்பு பண்புகளையும், கேன்சர் செல்களை அழிக்கும் குணமும் கொண்டது. குங்குமப்பூவை சருமம், எலும்பு மஜ்ஜை, புரோஸ்டேட், நுரையீரல், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய்க்கான தீவிரம் குறைக்கும் மருந்தாகப் பயன்படுத்தி வரலாம் என்கிறார்கள்.

குங்குமப்பூவை வெந்நீரில் ஊறவைத்து வடிகட்டி காலை சாப்பிட்டு வர தலைவலி, வாந்தி, குமட்டல், மூக்கில் நீர் வடிதல், அதிக தாகம் போன்றவை சரியாகும். இரத்தம் விருத்தியாகும், இரத்தம் சுத்தமடையும், சருமம் பளபளப்பாகும். மாதவிடாய் காலத்தில் சில பெண்களுக்கு அதிக இரத்தப்போக்கும், வலியும் ஏற்படும். இதனை தவிர்க்க குங்குமப்பூவை சாப்பிட நல்ல நிவாரணம் கிடைக்கும்.

குங்குமப்பூவை தேன் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வர ஆஸ்துமா மற்றும் சுவாசக்கோளாறுகள் விலகும். நுரையீரலில் உள்ள திசுக்களின் விகிதத்தினை குறைத்து இரத்த நாளங்களை சீராக வைக்க உதவுகிறது.

கர்ப்பிணி பெண்கள் ஐந்தாம் மாதம் முதல் 9 மாதம் வரை இரவில் நாள்தோறும் பாலில் குங்குமப்பூவை இட்டுக்காய்ச்சி குடித்து வர தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும். தினமும் 15 மி.கி. மட்டுமே சாப்பிட வேண்டும். அதிகம் சாப்பிட பக்க விளைவுகள் ஏற்படும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும் சாப்பிடலாம். பால் நன்கு சுரக்கும்.

வயது முதிர்ச்சியால் வரும் கண் பார்வை குறைபாடு குங்குமப்பூவை சாப்பிடுவதால் பாதிப்பின் கடுமை குறைகிறது. பாதிக்கப்பட்ட கண் கருவிழி திசுக்களை புதுப்பிக்க உதவுவதுடன் கருவிழி தசைகள் வலுவடையவும் உதவுகிறது என்கிறார்கள். இதுபற்றி ஆய்வு செய்த ஸ்பெயின் நாட்டின் ஆராய்ச்சியாளர்கள்.

இதையும் படியுங்கள்:
வால்மிளகின் வியக்கவைக்கும் ஆரோக்கியப் பலன்கள் தெரியுமா?
குங்குமப்பூ

இதய நோய்களை தடுக்கும் தியாமின், ரிபோஃப்ளேவின் சத்துக்கள் கொண்டது குங்குமப்பூ. மேலும், ஆண்களின் மற்றும் பெண்களின் பாலுணர்வு குறைபாட்டை தவிர்க்க உதவும். லிபிடோ அளவை அதிகரிக்க, மூளையில் டோபமைன் நன்கு சுரந்து இன்சோம்னியா தூக்க குறைபாடுகள் தவிர்க்கவும் குங்குமப்பூ உதவும் என்கிறார்கள். பாலியல் வாழ்வை மேம்படுத்த தினமும் 30 மி.கி. குங்குமப்பூ சுடுநீரில் 10 நிமிடங்கள் ஊற வைத்து இரவில் படுக்கும் முன் 4 வாரங்கள் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

குங்குமப்பூவில் காணப்படும் ஆன்டி ஆக்சிடன்டுகள் சுற்றுச்சூழல் காரணமாக சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து அவற்றை பாதுகாக்கிறது. சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்தை வழங்கி காயத்தை ஆற்றுகிறது. சருமத்தில் இருக்கக்கூடிய வெட்டு மற்றும் சிராய்ப்புகளை குங்குமப்பூ விரைவாக ஆற்றுவதற்கு உதவுகிறது. இதன் வீக்க எதிர்ப்பு பண்புகள் மற்றும் வைரஸ் மற்றும் பாக்டீரியாவுக்கு எதிராக செயல்படும் திறன் ஆகியவை முகப்பருக்கள் ஏற்படுவதை தடுக்கிறது.

5 முதல் 7 குங்குமப்பூ இழைகளை சுடுநீரில் போட்டு 10 நிமிடங்கள் கழித்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம் அல்லது இரவில் பாலுடன் சாப்பிடலாம். நல்ல பலன் தெரிய 15 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். எக்காரணம் கொண்டும் காபி, டீ யுடன் சாப்பிடக் கூடாது. இரத்த அழுத்தம் மற்றும் இரத்த உறைவு பாதிப்பு உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. குங்குமப்பூ அலர்ஜி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. தினசரி 5 கிராமுக்கு மேல் குங்குமப்பூ சாப்பிடக்கூடாது. பக்க விளைவுகள் ஏற்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com