சாப்பிடும் உணவு விரைவில் ஜீரணிப்பதற்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுவது ஓமம். ஓமத்தில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்களும் தாதுக்களும் உடலுக்கு நிறைய நன்மைகளைத் தருபவை. ஓமம் வாயு கோளாறுகளை சரிசெய்வதற்கு பெரிதும் துணை புரிகிறது.
1.இருமல், காய்ச்சல் மற்றும் சளிக்கான தீர்வு: கடுமையான இருமல், காய்ச்சல் மற்றும் சளிக்கு சிறந்த மருந்தாக ஓமம் பயன்படுகிறது. ஒரு ஸ்பூன் உலர்ந்த ஓமம் விதைகளை ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட்டால், சளி, காய்ச்சல், இருமலின் தாக்கம் குறையும். மேலும், குளிர்காலத்தில் தொண்டைக் கட்டு ஏற்பட்டால், ஓமத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து அருந்தினால், நோய் பாதிப்பு நீங்கும்.
2. தலைவலியைப் போக்கும்: ஒரு ஸ்பூன் ஓமத்தை இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்தத் தண்ணீரை வடிகட்டி குடித்து வந்தால், தலைவலி குறையும்.
3. நோய் எதிர்ப்பு சக்தி: ஓமம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுவதோடு, மூளையின் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது. நினைவாற்றலை அதிகரிக்க உதவும் ஓமத்தை வாரம் மூன்று முறை ஒரு ஸ்பூன் வீதம் உட்கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.
4. மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைக்க: மனச் சோர்வு மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க ஓமம் பயனுள்ளதாக உள்ளது. இரவில் படுக்கும் முன்பு ஒரு ஸ்பூன் ஓமம் பொடி செய்து சாப்பிட, மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.
5. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவுக்கு மருந்து: 100 மி.லி. மோரில் 2 டீஸ்பூன் தூள் ஓமத்தூள் சேர்த்து குடித்தால், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம்.
6. பல் வலிக்கு மருந்தாகும் ஓமம்: ஒரு ஸ்பூன் ஓமத்தை ஒரு டம்ளர் நீரில் போட்டுக் காய்ச்சி, சற்றே ஆறியதும் அதில் கால் ஸ்பூன் கல் உப்பு கலந்து அந்த நீரைக்கொண்டு வாய் கொப்பளிக்க பல் வலி குணமாகும்.