ஆரஞ்சு ஜூஸில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?

Orange Juice beneifits
Orange Juice beneifitshttps://www.youtube.com
Published on

ரஞ்சு பழம் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒன்று. அதுவும் குழந்தைகள் இந்த பழங்களை விட, ஆரஞ்சு ஜூஸையே குடிக்க ஆசைப்படுவார்கள். பொதுவாக, ஆரஞ்சு ஜூஸில் கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் A, பீட்டா கரோட்டீன் மற்றும் இரும்பு சத்துக்கள் போன்ற எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. அப்படிப்பட்ட ஆரஞ்சு ஜூஸினால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம்.

அதிகப்படியான கொழுப்பு பிரச்னைக்கு தீர்வு: ஆரஞ்சு ஜூஸில் பெக்டின் எனப்படும் கரையக்கூடிய ஒரு நார்சத்து அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள கொழுப்புகளைக் குறைக்க உதவுகிறது.

இதய பிரச்னைகளுக்கான மருந்து: ஆரஞ்சு பழ ஜூஸில் உள்ள அதிகப்படியான ஹெர்ஸ்பெரிடின் இதயத்தில் அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டங்களை சீராக வைத்துக்கொள்கிறது. மேலும், இதயத்திற்கு செல்லும் நரம்புகளிலும் இறுக்கம் ஏற்படாமல் தடுக்கிறது.

காயங்களுக்கு மருந்து: ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் அதிலுள்ள ப்ளோவினோய்டு என்ற பொருள் உடலில் ஏற்படும் காயங்களை குணமாக்குகிறது. அல்சர் காரணமாக குடலில் ஏற்படும் பிரச்னைகளையும் குறைக்கிறது. மேலும், இரத்த சோகை வராமல் தடுக்கிறது.

சிறுநீரக பிரச்னைக்கு தீர்வு: சிறுநீரகக் கற்களை கரைக்க ஆரஞ்சு ஜூஸ் உதவுகிறது. மேலும், இதனை தினமும் குடித்து வந்தால் கற்கள் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி: ஆரஞ்சு ஜூஸில் உள்ள வைட்டமின் C நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, வெள்ளை நிற செல்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. மேலும் செரிமானப் பிரச்னைக்கும் தீர்வாக உள்ளது.

முகப்பொலிவுக்கு உதவும்: தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்து வருவது முக சருமம் பொலிவாக இருக்க உதவுகிறது. அதேபோல், முகச் சுருக்கங்களைக் குறைத்து சருமம் முதுமையாக மாறுவதிலிருந்தும் தடுக்கிறது.

நீர்ச்சத்துக்கு உதவும்: உடலில் நீர்ச்சத்து குறைவாக உள்ளவர்கள் ஆரஞ்சு பழம் எடுத்துக்கொள்ளலாம். அதுவும் குளிர்காலங்களில் நீர்ச்சத்து குறைவது வழக்கம். ஆகையால், அந்தக் காலங்களில் தினமும் ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது அவசியமாகும்.

கண் பார்வைக்கு: ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் A அதிகமுள்ளதால், கண் பார்வை ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. அதேபோல். பார்வை குறைபாட்டை போக்கவும் உதவுகிறது.

ஆரஞ்சு ஜூஸில் இத்தனை நன்மைகள் இருந்தாலும் சிலர் அதனைத் தவிர்ப்பது நல்லது.

இனி, யார் யார் ஆரஞ்சு ஜூஸை தவிர்க்க வேண்டுமென்பதைப் பார்ப்போம்.

இதையும் படியுங்கள்:
எதையும் மனப்பூர்வமாக கொடுங்கள்!
Orange Juice beneifits

வயிற்று வலியில் உள்ளவர்கள் ஆரஞ்சு ஜூஸை தவிர்க்க வேண்டும். ஏனெனில். இது வயிற்றுப்போக்கிற்கு காரணமாகிவிடும். அதேபோல், அசிடிட்டி உள்ளவர்கள் ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் நெஞ்சு மற்றும் வயிற்று எரிச்சலை உண்டாக்கும். ஆகையால், அப்போது ஆரஞ்சு ஜூஸை தவிர்ப்பது நல்லது.

சிட்ரஸ் நிறைந்த பழங்களை எடுத்துக்கொண்ட பின்னர் ஆரஞ்சு பழம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஏனென்றால். இது அஜீரணக் கோளாறுகள் ஏற்படுவதற்குக் காரணமாகிவிடும். உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது நல்லது.

’குளிர் காலங்களில் ஆரஞ்சு ஜூஸ் எடுத்துக்கொள்ளலாமா?’ என்ற சந்தேகம் பலருக்கும் நிச்சயம் ஏற்படும். அவசியம் ஆரஞ்சு ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம். ஆனால். ஐஸை தவிர்த்துவிடுவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com