நம் மூளை நம் கையில்!

Our brains are in our hands
Our brains are in our handshttps://www.nakkheeran.in
Published on

ரு செயலை நன்றாக செய்து விட்டால், ‘அருமையான மூளை’ என்ற பாராட்டை பெறுவோம். நாம் செய்யும் செயலில் ஏதாவது சில குறைபாடு காணப்பட்டால், ‘மூளை இருக்கா உனக்கு?’ என்று கேட்பார்கள். ஆதலால் நம் மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைப்பதும், சோர்வடைய வைப்பது நம் கையில்தான் இருக்கிறது. அது எப்படி என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

உடம்பு அசைவதற்காக படைக்கப்பட்டதுதான். நாம் உறுதியாக, திடமாக இருந்தால் மூளையும் சிறப்பாக இயங்கும். நாம் உள்ளிழுக்கும் ஆக்சிஜனை மிக அதிகமாக பயன்படுத்திக் கொள்வது மூளைதான். நாம் தூய்மையற்ற காற்றை சுவாசித்தால் அதன் சக்திக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும். ஆதலால், மூடிய அறைக்குள் நாள் முழுவதும் உட்கார்ந்து இருப்பதும் தீமை. இதை உணர்ந்து அவ்வப்பொழுதும் சிறிது தொலைவு நடக்கலாம். ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல் அவ்வப்போது உடல் இயக்கத்திற்கு ஏதாவது சிறு வேளையை அசைவை கொடுக்கலாம். இதனால் மூளை சுறுசுறுப்படையும்.

தூக்கம் என்பது மூளைக்கு ஓய்வு எடுக்கும் செயல்முறை என்பது நாம் அறிந்தது. ஆனால், நீண்ட நேரம் தூங்கிக்கொண்டே இருந்தால் மூளையில் உள்ள அணுக்களின் மரணத்தை அது அதிகமாக்கிவிடும். உடலின் மற்ற பாகங்கள் சேதப்பட்டால் குணமடையும் தன்மை அவற்றுக்கு உண்டு. ஆனால், மூளை சேதப்பட்டால் அது நிரந்தர சேதம் ஆகிவிடும். ஆதலால் நீண்ட நேரம் தூங்குவதைத் தவிர்ப்போம். நிறைவான தூக்கத்தை மேற்கொள்வோம்.

மூளை நன்றாக செயல்பட தலையை முழுக்க மூடிக்கொண்டு தூங்கக் கூடாது. ஏனென்றால், கரியமில வாயுவின் வெளிப்பாட்டை அது குறைத்து, ஆக்ஸிஜன் சுவாசத்தையும் குறைத்துவிடும். ஆதலால், போர்த்திக்கொண்டு தூங்குவதிலும் கவனம் செலுத்துவோம்.

மூளைக்கு சிறந்த பயிற்சி சிந்திப்பதுதான். ஆதலால் ஆக்கப்பூர்வமான சிந்தனையை மேற்கொண்டால் மூளை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். அறிவார்ந்த பேச்சுகளில் ஈடுபடலாம். குறுக்கெழுத்துப் போட்டி, சுடோகு, பாட்டுக்குப் பாட்டு, புதிதாக ஏதாவது ஒரு மொழியை அல்லது கலையை கற்றுக்கொள்வது போன்றவை மறதியை குறைத்து மூளைக்கு வேலை கொடுக்கும் செயல்கள்.

உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தால் கொஞ்சம் ஓய்வு எடுக்க வேண்டும். கடுமையாக வேலை செய்தால் அது மூளையை பாதித்து சேதப்படுத்தி விடும். 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டே இருக்கும் ஒரு உறுப்பு மூளைதான். ஆனாலும், பேச்சு, எழுத்து, சிந்தனை, உழைப்பு இப்படி எதுவும் இல்லாத சூழலில் மூளைக்கு சற்று ஓய்வு தர வேண்டியது முக்கியம். அதாவது, வழக்கமான வேலையில் இருந்து ஒதுங்கி பொழுதுபோக்கு எனப்படும் விருப்பமான பணிகளில் ஈடுபடலாம். குழந்தைகளுடன் விளையாடலாம். தியானம் செய்யலாம். துணிமணிகளை அயர்ன் செய்யலாம். தோட்ட வேலைகளில் ஈடுபடலாம்.

மூளை நன்றாக இயங்குவதற்கு உணவு முக்கியமானது. இரவில் தூங்கி அதிகாலையில் உறக்கம் களைந்து எழும்போது நம் இரத்த சர்க்கரை மிகவும் குறைந்து இருக்கும். அதனால் அவற்றை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு பசியாறுவது அவசியம். அதனால் காலை உணவை தவிர்க்காமல் கட்டாயமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஜப்பானிய ‘ஹரா ஹச்சி பு’ முறையில் உடல் எடையை எளிதாகக் குறைக்கலாம்!
Our brains are in our hands

முக்கியமாக, பரீட்சைக்கு போனாலும், வேலைக்குப் போனாலும், போட்டிகளுக்குப் போனாலும் உடலை திடப்படுத்திக்கொண்டு நம்மை நாமே தைரியப்படுத்திக் கொண்டு நம்மால் எல்லாம் முடியும் என்ற நேர்மறை எண்ணத்துடன் செல்வது மூளை சூப்பராக இயங்கிட உதவும்.

ஆதலால், 'நம் மூளை நம் கையில்' என்பதை நினைவில் கொண்டு அதன் சிந்தனை ஓட்டம் சீராக தங்கு தடையின்றி செயல்பட உண்ணும் உணவில் இருந்து அனைத்திலும் அக்கறை காட்டி சுறுசுறுப்பாக மூளையை இயங்க வைப்போம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com