Uppu kadalai Healthy snacks
Uppu kadalai

ஓவர் வெயிட்டா? எளிதாக எடையைக் குறைக்க இதோ ஒரு சூப்பர் ஸ்நாக்!

Published on

தற்போது உள்ள காலக்கட்டத்தில் ஸ்நாக்ஸ் என்றாலே எண்ணெய்யில் பொரித்த உணவுகள் தான் என்றாகி விட்டது. இதையே இளைய சமூகத்தினர் அதிகம் சாப்பிட விரும்புகிறார்கள். வேர்க்கடலை, உப்புக்கடலை, அவல் போன்ற ஆரோக்கியம் நிறைந்த ஸ்நாக்ஸ்கள் மறந்து விட்டனர். ஆனால், இவற்றில் தான் ஆரோக்கியமும், சத்துக்களும் அதிகம் உள்ளது என்பதை பலர் அறிவதில்லை. இந்த பதிவில் உப்புக்கடலையால் (Uppu kadalai) நம் உடலுக்கு கிடைக்கும் சத்துக்களையும், நன்மைகளையும் பற்றி விரிவாக காண்போம்.

கருப்பு கொண்டைக்கடலையை எண்ணெய் சேர்க்காமல் உப்பு மட்டும் சேர்த்து வறுத்து எடுப்பது தான் உப்புக்கடலையாகும். இந்த உப்புக்கடலையை தினமும் ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்ளலாம். இதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள் ஏராளம். உப்புக்கடலையை சாப்பிடுவதால் உடல் எடையைக் குறைக்க முடியும்.

இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் உடல் எடை குறைப்பிற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் உடலுக்கு அதிக ஆற்றலை தருகிறது. பொதுவாக நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது வெகுநேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். எனவே, இதை ஸ்நாக்ஸாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.

உப்புக்கடலையில் காப்பர், மேங்கனீஸ், ஃபோலேட், பாஸ்பரஸ் போன்றவை இருப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகும். பாஸ்பரஸ் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. எனவே, இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இது கெட்ட கொழுப்பை குறைக்கிறது.

ரத்த சர்க்கரையை ஏற்றும் தன்மை இதில் மிகவும் குறைவு. சர்க்கரை நோயாளிகள் சேர்த்துக் கொள்ளக்கூடிய நல்ல ஸ்நாக்ஸ். Low glycemic index உணவுகளை சர்க்கரை நோயாளிகள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். மற்ற உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். ஆனால், Low glycemic index உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை ஏற்றாது.

நம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க கேல்சியம் மிகவும் தேவையான சத்தாகும். இது உப்புக்கடலையில் இருக்கிறது. இந்த ஸ்நாக்ஸை எடுத்துக் கொள்வது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வறுத்த உப்புக்கடலையில் கால்சியம், கார்போஹைடரேட்,  புரதம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் உள்ளன. மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இதை சாப்பிடும் போது  உடனடியாக உடலுக்கு எனர்ஜி கிடைக்கிறது.

இதையும் படியுங்கள்:
எச்சரிக்கை! இந்த உணவுகளுடன் தண்ணீர் குடிக்க வேண்டாம்...!
Uppu kadalai Healthy snacks

வறுத்த உப்புக்கடலையில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது நம் நிறைவாற்றலை மேம்படுத்த உதவுகிறது. மூளை சரியாக செயல்பட கோலின் மிகவும் அவசியமாகும். இந்த வறுத்த உப்புக்கடலையில் கோலின் அதிகம் உள்ளது. நரம்பு செயல்பாட்டிற்கு மிகவும் அவசியமான மெக்னீசியம் இதில் அதிகம் உள்ளது. இத்தனை நன்மைகளைக் கொண்ட வறுத்த உப்புக்கடலையை நீங்களும் ஸ்நாக்ஸாக எடுத்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com