பல நன்மைகளைத் தரும் பனம் பழம்!

பல நன்மைகளைத் தரும் பனம் பழம்!

விதைத்து, பராமரித்து வளர்க்க வேண்டிதில்லை என்கிற அளவில் நமக்கு பெரிதாக சிரமம் தராதது பனை மரம். பனை மரத்தின் பழம் எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ளது. அவற்றை இந்தப் பதிவில் காண்போம்.

* பனம் பழத்தின் உள்ளே இரண்டு அல்லது மூன்று பெரிய உறுதியான கொட்டைகள் இருக்கும். பனம் பழத்தில் நார் நிறைந்து காணப்படும். நார்களின் நடுவே ஆரஞ்சு அல்லது சிவந்த மஞ்சள் நிறத்துடன் கூடிய கெட்டியான சாறு கலந்திருக்கும். இந்தச் சாறு இனிப்புச் சுவையுடன் இருக்கும்.

* பப்பாளி, மாம்பழத்தை விட கூடுதலாக வைட்டமின் சி மற்றும் கால்சியம் கொண்டு இருக்கிறது பனம் பழம். பனம் பழ சாற்றில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச் சத்து, உலோக உப்புகள், சர்க்கரை வைட்டமின் சி மற்றும் கரோட்டின் ஆகியவை நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக, பார்வைத் திறனை அதிகரிக்கும் வைட்டமின் ஏ சத்து இந்தப் பழத்தில் அதிக அளவில் இருக்கிறது.

* இந்தப் பழத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அளவோடு சாப்பிடலாம்.

* பனம் பழத்தை சாப்பிட விரும்புபவர்கள் நெருப்பு மூட்டி சுட்டும் சாப்பிடலாம்.

* நோய் எதிர்ப்பு சக்தியை உண்டு பண்ணி சரும நோய்களை பனம் பழம் சரி செய்கிறது.

* பனம் பழம் உடலுக்குத் தேவையான வெப்பத்தைத் தருகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது. உடலில் உள்ள கழிவுகளை அகற்றுகிறது.

* நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களும் பனம் பழத்தை சாப்பிடலாம்.

* பனம் பழச் சாற்றுடன் மாவு சேர்த்து பிசைந்து பனியாரம் செய்தும் சாப்பிடுவார்கள். தேங்காய், வாழைப் பழம், பால், சர்க்கரை சேர்த்து இனிப்புப் பலகாரங்கள் செய்வார்கள். தக்காளி ஜாம் போலவும் பனம் பழத்திலிருந்து ஜாம் தயாரிக்கிறார்கள்.

* பனம் பழத்தின் சாற்றை சரும நோய்களுக்குப் பூசுவதால் நிவாரணம் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com