

உடலுக்கு குளிர்ச்சி மற்றும் சத்துக்கள் வழங்கும் இயற்கை பானமாக பதநீர் கருதப்படுகிறது. பதநீரை வெறுமனே கோடைக்கு ஏற்ற இயற்கை குளிர்பானம் என்று மட்டும் சொல்ல முடியாது. இதில் கால்சியம், சர்க்கரைச்சத்து, தயாமின், வைட்டமின் சி, புரதச்சத்து மற்றும் நிகோனிக் அமிலம் உள்ளிட்ட சத்துகள் அடங்கியுள்ளன. ஆக, பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்த பதநீரைக் குடிப்பதால் வயிற்றுப்புண், தொண்டைப்புண், உடல்சூடு, பெண்களின் வெள்ளைப்படுதல், வெட்டை நோய்கள், மலச்சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் இருந்து விடுதலை பெறலாம்.
இவை தவிர உடல்வீக்கம், நெஞ்செரிச்சல், பித்தம் தொடர்பான கோளாறுகள், கல்லீரல் - மண்ணீரல் வீக்கம் போன்றவற்றையும் குணப்படுத்தக்கூடியது பதநீர். சிறுநீர் தொடர்பான நோய்களுக்கு நல்ல பலன் தரும்.
அந்த காலங்களில் பதநீர் அருந்தி வந்த பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் தொந்தரவுகள் எதுவும் வராமல் இருந்தன. மேலும் அவர்களுக்கு மகப்பேறு காலங்களில் வரும் பிரச்னைகளை நீக்கி குழந்தை பெற்றபிறகு அதிகமாக பால் சுரக்கும் தன்மை இருந்தன.
இதனால் தாயும், சேயும் நலமாக இருந்தனர். இதுதவிர கால்சியம் குறைபாட்டால் ஏற்படக்கூடிய மூட்டுவலி, பற்களில் ஏற்படும் பிரச்னைகள் எதுவும் அவர்களை நெருங்காமல் இருந்தன. அதன் அடிப்படையில் இந்த பதநீரை அருந்துவதன்மூலம் தாயும் சேயும் நலம் பெறலாம்.
பிரிட்டிஷ் காரர்கள் பனை நுங்கிற்கு வைத்த பெயர் ‘ஐஸ் ஆப்பிள்’. இது தாகத்தை தணிப்பது மட்டுமல்ல, பல்வேறு நோய்களை தடுக்கும் ஆற்றல் பெற்றது. 100 கிராம் பாலில் 3 கிராம் புரதம் இருக்கிறது. ஆனால் அதே அளவு நுங்கில் 10 கிராம் புரதம் இருக்கிறது. இதில் 60% புரதமும், 30% மாவுப் பொருளும், மிகக்குறைந்த அளவே கொழுப்பு உள்ளது.
நுங்கில் வைட்டமின் பி, இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துகள் இருந்தாலும், இந்த பழத்தில் குறைந்த கலோரி மற்றும் அதிக நீர்ச்சத்து இருக்கிறது.. அதனால்தான் நுங்கை சாப்பிட்டவுடன், வயிற்றை நீண்டநேரம் நிரப்புகிறது.. எடை இழப்பு முயற்சியில் இருப்பவர்கள் இதனை சாப்பிட இதுவே காரணம் என்கிறார்கள்.. தினமும் 2 அல்லது 3 நுங்கு சாப்பிட உடல் சூடு குறையும், நீர்ச்சத்தை மேம்படுத்தும், வெயில் காலத்தை தவிர, நிறைய பேர் இதைப் பெரிதாக கண்டுகொள்வதில்லை... ஆனால், எந்த காலத்திலும், கட்டாயம் சாப்பிட வேண்டிய பழம்.. எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். காலநேரம் கிடையாது.
பெண்களுக்கு நுங்கு அருமருந்தாக அமைந்துள்ளது என்கிறார்கள்.. அந்த அளவுக்கு அதில் மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளதாம். செரிமானத்தை துரிதப்படுத்தும், அசிடிட்டி தவிர்க்க மற்றும் ரத்த சோகை தவிர்க்க மற்றும் மார்பக கட்டி தடுக்கும் என்கிறார்கள். நகங்கள் உடையாமல் வளர, தலைமுடி மற்றும் தோல் ஆரோக்கியத்தை காக்க மற்றும் முகப்பரு ஏற்படுவதையும் தடுக்கும் ஆற்றல் மிக்க பாயோடின் சத்து நுங்கில் உள்ளது.
நுங்கிற்கு உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு. பனை நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியை தூண்டுவதோடு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டிற்குமே மருந்தாக பயன்படுகிறது. வயிற்று கோளாறுகளை சரி செய்வதில் நுங்கு நல்ல பலனை தரும். வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்த பிறகு, இரண்டு அல்லது மூன்று நுங்குகளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் காணாமல் போகும்.. அத்துடன் குடல் புண்களும் ஆறிவிடும்.. அனீமியா பிரச்சனை உள்ளவர்கள், இந்த நுங்கை சாப்பிட்டு வந்தால், ரத்த சோகை தீரும்..
எது சாப்பிட்டாலும் சாப்பிட்டவுடன் சிலருக்கு வயிற்றில் எரிச்சல் ஏற்படும், சிலருக்கு வாயில், நாக்கில் புண் அடிக்கடி வந்து தொல்லை தரும்.
இந்த பிரச்சினை உள்ளவர்கள் இரண்டு நுங்கில் உள்ள சதைப்பகுதியை தனியாக எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து அதனுடன் ஒரு டம்ளர் தேங்காய் பால் கலந்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட அனைத்தும் சரியாகும். அல்சரின் அறிகுறிகள் நாளடைவில் குறையும்.
கர்ப்பிணிகள் நுங்கை சாப்பிடும்போது, அவர்களுடைய செரிமானம் துரிதமாகும். அசிடிட்டி பிரச்சனையும் தீரும். கல்லீரல் பிரச்னை, அஜீரணக் கோளாறு ஆகிய பிரச்னைகளுக்கு நுங்கு நல்லது. சுக்கு, மிளகு, கருப்பட்டி சேர்த்து, குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால், தாய்ப் பால் நன்கு சுரக்கும். குழந்தைக்கும் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும். வெள்ளைப்படுதல் பிரச்சனையை இந்த நுங்கு சரி செய்கிறது.
நுங்குவில் உள்ள சாறை மட்டும் எடுத்து, அதை மெல்லிய பருத்தி துணியை நனைத்து, கண்களில் மேல் பற்றாக வைத்து வந்தால், கண்களில் ஏற்படும் சிவப்பு தன்மை மறையும். கண்களில் ஏற்படும் சோர்வு சரியாகும். எந்நேரமும் கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்களுக்கு இது மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்.