பப்பாளி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 நன்மைகள்! 

7 benefits of eating papaya fruit!
7 benefits of eating papaya fruit!

பப்பாளி பழம் சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பது மட்டுமின்றி இதில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல நன்மைகள் உள்ளது. பப்பாளி பழத்தின் விதைகளைத் தவிர இதன் மென்மையான ஆரஞ்சு நிற சதைப்பற்று உண்பதற்கு உகந்தது. சரி வாருங்கள் இந்த பதிவில் பப்பாளிப் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் 7 நன்மைகள் பற்றி பார்க்கலாம். 

இதையும் படியுங்கள்:
கண் பார்வை கூர்மையாக எடுத்துக்கொள்ள வேண்டிய வைட்டமின் உணவுகள்!
7 benefits of eating papaya fruit!
  1. கண்ணுக்கு ஆரோக்கியம் தரும்: பப்பாளி பழத்தில் விட்டமின் ஏ, லூட்டின் போன்ற ப்ளாவானாய்டுகள் அதிகம் நிறைந்துள்ளது. இது கண் தசைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். மேலும் அவை சேதமடையாமாலும் பாதுகாக்கும். 

  2. கீழ்வாதத்தைத் தடுக்கும்: கீழ்வாதம் என்பது நம்மை பலவீனப்படுத்தும் நோய். இது விட்டமின் சி குறைபாட்டினால் ஏற்படுகிறது. பப்பாளியில் விட்டமின் சி உடன் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளதால், எலும்புகளுக்கு வலு சேர்த்து நம்மை திடமாக்கும். உடலில் விட்டமின் சி குறைந்தால் மூட்டு வலி வருவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே உங்களது உணவில் பப்பாளியை கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள். 

  3. முடி வளர்ச்சிக்கு உதவும்: பப்பாளி பழம் நம்மை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமின்றி கூந்தல் வளர்ச்சிக்கும் அதிகம் உதவும். இதில் நிறைந்து காணப்படும் விட்டமின் ஏ சத்து முடி வளர்ச்சியைத் தூண்டி கூந்தலை மென்மையாக பராமரிக்க உதவுகிறது. வாரம் ஒருமுறை பப்பாளி சாற்றை தலைக்கு தேய்ப்பது மூலமாக பொடுகுத் தொல்லை நீங்கும். 

  4. கொழுப்பைக் குறைக்கும்: பப்பாளியில் அதிக அளவில் நார்ச்சத்து மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளது. அவை நமது தமனிகளில் கொழுப்பு படிவதைத் தடுக்கிறது. இயற்கையாகவே உடலில் உள்ள கொழுப்புகளைக் குறைக்கும் பண்பு பப்பாளிக்கு உண்டு. இதனால் மாரடைப்பு அபாயம் நீங்கும். 

  5. செரிமானம் மேம்படும்: பப்பாளி சாப்பிடுவது உங்களின் செரிமான சக்தியை மேம்படுத்தும். ஏனெனில் இதில் அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால், செரிமானத்திற்கு தேவையான நொதிகள் அதிகம் இருக்கிறது. 

  6. சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும்: சக்கரை வியாதி, இன்று பெரும்பாலானவர்களுக்கு வரும் சராசரி நோயாக மாறிவிட்டது. இந்த சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்பதில் பப்பாளி பழம் சிறப்பாக செயல்படுகிறது. மேலும் உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தந்து உடல் சோர்வையும் குறைக்கிறது. 

  7. மாதவிடாய் பிரச்சனைகளை போக்கும்: பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் உடல் சோர்வு, வலி போன்றவை தவிர்க்க முடியாத ஒன்றாகும். இந்த சமயத்தில் பெண்களுக்கு உடலில் பல சிக்கல்கள் ஏற்படும். எனவே பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடுவதால் மாதவிடாய் தருணங்களில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com