பளபளப்பான சருமம் தரும் பசலைக் கீரை ஜூஸ்!

Pasalai keerai juice for glowing skin
Pasalai keerai juice for glowing skinhttps://tamil.babydestination.com

டல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானதாகக் கருதப்படும் வைட்டமின்கள் A, C, K மற்றும் தாதுக்களான கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து ஆகிய அனைத்தும் பசலைக் கீரையில் அபரிமிதமான அளவில் நிறைந்துள்ளன. ஒருவேளை டோசில் (dose) உடல் முழுவதுக்கும் அன்றாடத் தேவை பூர்த்தி பெறும் அளவுக்கு வலிமை நிறைந்த ஊட்டச்சத்துக்கள் கிடைத்து விடுகின்றன.

பசலைக் கீரை ஜூஸில் இருக்கும் வைட்டமின் C நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து, உடலை தொற்றுக்களிலிருந்து காப்பாற்றுகிறது; அதன் காரணமாக சுகவீனங்கள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

இதிலுள்ள வைட்டமின் K மற்றும் கால்சியமானது எலும்புகள் ஆரோக்கியம் பெற உதவுகின்றன. குறிப்பாக வைட்டமின் K, கால்சியம் சத்து முழுவதுமாக உடலுக்குள் உறிஞ்சப்பட்டு எலும்புகள் நிறைவான கனிமச்சத்து பெற்று இயங்க உதவுகிறது.

இதிலிருக்கும் பொட்டாசிய சத்து இரத்த அழுத்தத்தை சீராக்கி சோடியம் அளவை சமநிலைப்படுத்துகிறது. இதனால் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டு இதயம் ஆரோக்கியமாக இயங்க முடிகிறது.

இதிலுள்ள நார்ச்சத்துக்கள் ஜீரண மண்டல உறுப்புகள் அனைத்தும் சிறப்பாக பணி புரிய உதவி புரிகின்றன. மேலும், மலச்சிக்கல் ஏற்படாமலும் தடுக்கின்றன.

இதையும் படியுங்கள்:
அதற்கு பதில் இது; எதற்குப் பதில் எது?
Pasalai keerai juice for glowing skin

பசலைக் கீரை ஜூஸில் இருக்கும் வைட்டமின் A, C மற்றும் அன்டி ஆக்சிடன்ட்களானது, ஃபிரி ரேடிகல்களை எதிர்த்துப் போராடி சரும ஆரோக்கியத்தை வளப்படுத்துகின்றன; சருமத்திற்கு பளபளப்பையும் தருகின்றன.

இதிலுள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் குறைந்த அளவு கலோரிகள் கொண்ட தன்மையும் எடைக் குறைப்பிற்கு உதவுபவை. ஆரோக்கியம் குறையாமல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த ஜூஸ் அருந்துவது ஓர் அருமையான தேர்வாகும்.

இத்தனை ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பசலைக்கீரை செடியானது சுலபமாக வீட்டிலேயே வளரக்கூடியது. நாமும் இந்த கீரையை வளர்ப்போம்; நன்மைகள் பல பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com