Pancreatic damage and its symptoms!
Pancreatic damage and its symptoms!

55 வயதைக் கடந்தவர்கள் ஜாக்கிரதை... கணைய பாதிப்பும் அதன் அறிகுறிகளும்! 

Published on

கணையம் என்பது வயிற்றுக்கு பின்புறமாக அமைந்துள்ள ஒரு முக்கியமான உறுப்பு. இது உடலில் செரிமானத்திற்கு தேவையான நொதிகளை உற்பத்தி செய்வதுடன், இன்சுலின் போன்ற ஹார்மோனைகளையும் சுரக்கிறது. வயதான காலத்தில் பல்வேறு காரணங்களால் கணையம் பாதிக்கப்படலாம். இந்தப் பதிவில் 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கணைய பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள் பற்றி பார்க்கலாம். 

கணைய பாதிப்பின் காரணங்கள்: 

நீரிழிவு நோய் கணையத்தின் இன்சுலின் உற்பத்தியை பாதித்து கணைய பாதிப்பு ஏற்பட வழிவகுக்கும். அதிக அளவில் மது அருந்துதல், கணையத்தில் வீக்கத்தை ஏற்படுத்தி கணைய அழற்சி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.‌ கல்லீரல் நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு கணையம் பாதிப்படையலாம். 

அதிக கொழுப்புள்ள உணவுகள், கணையத்தில் சுரக்கும் நொதிகளின் செயல்பாட்டை பாதித்து கணைய பாதிப்புக்கு வழிவகுக்கும். புகைப்பிடித்தல், கணைய புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு வகையான கணைய பாதிப்புகளுக்கு முக்கிய காரணமாகும். 

சில குடும்பங்களில் கணைய புற்றுநோய் போன்ற கணைய பாதிப்புகள் மரபணு ரீதியாக இருக்கும். இத்துடன், வயதான காலத்தில் கணையத்தின் செயல்பாடு குறைவதால் அது பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.‌

கணைய பாதிப்பின் அறிகுறிகள்: 

கணைய பாதிப்பின் அறிகுறிகள் நோயின் தீவரத்தை பொறுத்து மாறுபடும். சில பொதுவான அறிகுறிகள்: 

  • வயிற்று வலி 

  • வயிற்றுப்புண் 

  • மஞ்சள் காமாலை 

  • எடை இழப்பு 

  • மலம் வெளுத்த நிறமாக இருத்தல்

  • களைப்பு 

  • சர்க்கரை நோய்

கணைய பாதிப்பிற்கான சிகிச்சைகள்: 

கணைய பாதிப்பிற்கான சிகிச்சை என்பது நோயின் தீவிரம், வகை மற்றும் காரணத்தைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக கணைய பாதிப்புக்கான சிகிச்சையில் பின்வரும் வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. 

மருத்துவ சிகிச்சை என்று பார்க்கும் போது வலி நிவாரணிகள், அமிலத்தை குறைக்கும் மருந்துகள், நொதி மாத்திரைகள் மற்றும் இன்சுலின் போன்ற மருந்துகள் கொடுக்கப்படும்.‌ கொழுப்பு குறைந்த, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் உட்கொள்ள பரிந்துரைக்கப்படும். 

இதையும் படியுங்கள்:
55 வயதுக்கு மேல் பணம் சம்பாதிக்க சில முதலீட்டு யோசனைகள்! 
Pancreatic damage and its symptoms!

கணையத்தில் கட்டி அல்லது வீக்கம் போன்ற வளர்ச்சிகள் இருந்தால் அவை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்படலாம். ஒருவேளை கணைய புற்றுநோய் இருந்தால் கதிர்வீச்சு சிகிச்சை மேலும் கணைய புற்று நோய்க்கு கீமோ தெரப்பி கொடுக்கப்படலாம். 

55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கணைய பாதிப்பு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆரம்பக் கட்டத்திலேயே கணைய பாதிப்பைக் கண்டறிந்து சிகிச்சை செய்தால் நோயின் தீவிரத்தை குறைத்து நோயாளியின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும். எனவே, மேற்கண்ட அறிகுறிகள் ஏதேனும் தோன்றினால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் கணைய பாதிப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம். 

logo
Kalki Online
kalkionline.com