க்ரீன் டீ குடிக்கிறீங்களா? - இந்த 'ரகசியம்' தெரியலைன்னா நீங்க பாவம்! 

green tea
green tea
Published on

உடல் எடையைக் குறைக்க நினைப்போர் முதல் உடல் ஆரோக்கியத்தைப் பேண விரும்புவோர் வரை, க்ரீன் டீ (Green Tea) என்பது இன்று உலக அளவில் மிகவும் பிரபலமான ஒரு பானமாக மாறிவிட்டது. இதில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, குறிப்பாக EGCG (Epigallocatechin Gallate) எனப்படும் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவில் உள்ளது. க்ரீன் டீயை தொடர்ந்து அருந்துவது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் எடையைக் குறைக்கப் பெரிதும் உதவுவதாகப் பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

க்ரீன் டீ எண்ணற்ற நன்மைகளை வழங்கினாலும், சில பக்கவிளைவுகளையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக, சில குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சனைகளைக் கொண்டவர்கள் க்ரீன் டீயைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், அவர்களின் ஆரோக்கிய நிலை இன்னும் மோசமடையக்கூடும். யார் யாரெல்லாம் க்ரீன் டீயைத் தவிர்க்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வோம் வாங்க.

க்ரீன் டீயைத் தவிர்க்க வேண்டியவர்கள்:

  • எரிச்சல் கொண்ட குடல் நோய்' (Irritable Bowel Syndrome - IBS), அடிக்கடி வயிற்றுப்போக்கு போன்ற குடல் சார்ந்த பிரச்சனைகளைக் கொண்டவர்கள் க்ரீன் டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இது அவர்களின் நிலையை மேலும் மோசமாக்கக்கூடும்.

  • குழந்தைகளுக்குக் க்ரீன் டீ கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், க்ரீன் டீயில் அதிக அளவில் காஃபின் (Caffeine) உள்ளது. இந்தக் காஃபின் குழந்தைகளின் நரம்பு மண்டலத்தைத் தூண்டி, புரதம் மற்றும் கொழுப்பை உறிஞ்சும் திறனைக் குறைத்துவிடும். எனவே, எந்தக் காரணத்தைக் கொண்டும் குழந்தைகளுக்குக் க்ரீன் டீயைக் கொடுக்க வேண்டாம்.

  • காஃபின் அலர்ஜி அல்லது உணர்திறன் கொண்டவர்கள் க்ரீன் டீ குடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். இத்தகையவர்களுக்குச் சிறிதளவு க்ரீன் டீ உடலுக்குள் சென்றால்கூட, அது இதயத் துடிப்பை அதிகரித்து, உடல் சோர்வு, எரிச்சலுணர்வு அல்லது நடுக்கத்தை உண்டாக்கிவிடும்.

  • உடலில் இரும்புச்சத்து குறைவாக உள்ளவர்கள் அல்லது ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் க்ரீன் டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், க்ரீன் டீயைக் குடிக்கும்போது, அது உடலின் இரும்புச்சத்தை உறிஞ்சும் திறனைக் குறைத்து, அவர்களின் நிலையை இன்னும் மோசமாக்கக்கூடும்.

  • தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் க்ரீன் டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். கர்ப்ப காலத்தில் க்ரீன் டீ குடித்தால், அதில் உள்ள அதிகப்படியான காஃபின் காரணமாகக் கருச்சிதைவு ஏற்படலாம் அல்லது குழந்தையின் வளர்ச்சியில் இடையூறு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

  • க்ரீன் டீயில் இயற்கையாகவே 'டானின்கள்' (Tannins) என்னும் சேர்மம் உள்ளது. இது வயிற்று அமிலத்தின் உற்பத்தியை அதிகரிக்கும். ஏற்கனவே அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் க்ரீன் டீ குடித்தால், இது அமில உற்பத்தியை மேலும் அதிகரித்து, வயிற்று உப்புசம், வயிற்று அசௌகரியம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com