அற்புதம் செய்யும் நித்திய கல்யாணி.. இத்தனை நாள் இது தெரியாம போச்சே! 

periwinkle flower
periwinkle flower

நித்தியகல்யாணி எனப்படும் ஒரு வகை செடி எல்லா தட்பவெப்பங்களிலும் வளரக்கூடியதாகும். இதற்கென்று குறிப்பிட்ட காலம் எதுவும் கிடையாது. எல்லா காலத்திலும் இது பூப்பதினாலேயே நித்திய கல்யாணி என்கின்றனர். அதாவது நித்தியம் என்றால் ‘தினமும்’ என அர்த்தம். கல்யாணி என்றால் ‘மலர்தல்’ என்பதைக் குறிக்கும். இந்த பதிவில் நித்திய கல்யாணி செடியின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

நித்தியகல்யாணியை ஆங்கிலத்தில் Periwinkle Flower என அழைப்பார்கள். குறிப்பாக இதற்கு சீன மருத்துவத்தில் மிகப்பெரிய இடம் உள்ளது. இதை பெரும்பாலும் அழகுக்காக தோட்ட செடியாக மட்டுமே பயிரிட்டு வருகிறோம். ஆனால் இதில் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பல்வேறு விதமான மருத்துவ குணங்கள் உள்ளது. வெறும் இரண்டு சென்டிமீட்டர் அளவு இருக்கும் இந்த மலர்கள் புற்று நோய்க்கு தீர்வைக் கொடுக்கும் என்ன சொல்லப்படுகிறது. மேலும் இது எதுபோன்ற நோய்களை விரட்டும் என்றால், 

ஆஸ்துமா: ஆஸ்துமா எனப்படும் நோய் நுரையீரலில் ஏற்படும் அழற்சியினால் ஏற்படுவதாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்படும். இந்நோயின் பாதிப்பு 100 மில்லியனுக்கும் அதிகமாக மக்களுக்கு இருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. ஆஸ்துமாவை கட்டுப்படுத்த நித்திய கல்யாணி செடியின் வேரை எடுத்து, தண்ணீரில் கொதிக்க வைத்து சர்க்கரை அல்லது தேன் சேர்த்து தினமும் இருவேளை குடித்து வந்தால் ஆஸ்துமா தொல்லை நீங்கும். 

மார்பக புற்றுநோய்: பெரும்பாலான பெண்களுக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது மார்பக புற்றுநோய். இதில் பெண்களின் மார்பகங்களில் கட்டிகள் உருவாகி பின்னர் புற்று நோயாக மாறுகிறது. இந்த நோயால் அவதிப்படுபவர்கள் நித்திய கல்யாணி செடியை பயன்படுத்தி அதன் தன்மையை குறைக்க முடியும். இதற்கு நித்திய கல்யாணி செடியை மொத்தமாக எடுத்து நன்கு காய வைத்து பொடியாக்கி, தினசரி 10 கிராம் அளவுக்கு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால், மார்பக புற்றுநோய் குணமாகும் என சொல்லப்படுகிறது. அதேபோல கருப்பை புற்றுநோய் பாதிப்பு இருப்பவர்கள் நித்திய கல்யாணி பூவை காயவைத்து அதை பொடியாக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். 

மாதவிடாய் பிரச்சனைகள்: பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நிகழ்வது அவசியமாகும். இதுதான் அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதன் அறிகுறி. சில பெண்களுக்கு மாதவிடாய் காலம் நிலையில்லாமல் இருக்கும். பொதுவாக 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆக வேண்டும். இதுவே 35 நாட்களுக்கு ஒரு முறை ஆகிறது என்றால் அதை நிலையற்ற மாதவிடாய் என அழைக்கின்றனர். இத்தகைய பாதிப்பு உள்ளவர்கள் நித்திய கல்யாணி வேரை எடுத்து வெந்நீரில் கொதிக்க வைத்து தினசரி வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மாதவிடாய் சுழற்சி சீராகும். 

சர்க்கரை நோய்: இன்றைய காலத்தில் அனைவருக்கும் வரும் ஒரு பொதுவான நோயாக சர்க்கரை நோய் மாறிவிட்டது. ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்து விட்டால் உடலில் மேலும் பல பாதிப்புகள் வந்துவிடுகிறது. இந்நோயைக் கண்டு நாம் அச்சப்பட வேண்டாம் என்றாலும், அது வந்துவிட்டால் கட்டுக்கோப்பாக இருப்பது அவசியம். நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த, நித்திய கல்யாணி இலைகள் மற்றும் பூக்களை தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயமாக சுண்டி வந்ததும் காலை மாலை என இருவேளை குடித்து வந்தால், நோயின் தீவிரத் தன்மை குறையும். 

இதையும் படியுங்கள்:
Japanese Calligraphy Ink: உலகிலேயே விலையுர்ந்த மை.. அப்படி என்ன ஸ்பெஷல்? 
periwinkle flower

ஜுரம்: நாள்பட்ட காய்ச்சலால் அவதிப்படுபவர்களுக்கு நித்தியகல்யாணி சிறந்த அருமருந்தாகும். நித்தியகல்யாணி இலைகளை ஒரு கைப்பிடி எடுத்து, மேலும் அந்த செடியின் தண்டையும் சேர்த்து தண்ணீரில் சேர்த்து கொதிக்க விடுங்கள். அது பாதியாக சுண்டி வந்ததும் தேவையான அளவு சர்க்கரை அல்லது தேன் சேர்த்து மேலும் சுண்டக்காய்ச்சி இருவேளை குடித்தால் ஜுரம் மாயமாகிவிடும். 

மன நோய்க்கு ஏற்ற சிறந்த தீர்வை வழங்கும் மூலிகையாகவும் நித்தியகல்யாணி திகழ்கிறது. அதேபோல ரத்தசோகை, ரத்த அழுத்தம் உள்ளவர்களும் நித்திய கல்யாணி பூக்களை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் குணமாகும். எனவே இந்த அற்புத மூலிகையை உங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள். கருவுற்றிருப்பவர்கள் இந்த வகை மூலிகைகளை எடுத்துக் கொள்ளும்போது மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com