
உடல் ஆரோக்கியத்துக்கு தாவர விதைகள் பெரிதும் பயன்படுகின்றன. நம் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டிய தாவர விதைகள் பற்றியும் அவற்றுள் அடங்கியிருக்கும் உடலுக்குத் தேவையான ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதைப் பற்றியும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.
* இதய ஆரோக்கியத்திற்குத் தேவையான ஒமேகா-3 என்னும் நல்ல கொழுப்பும் நார்ச்சத்துக்களும் நிறைந்தது ஃபிளாக்ஸ் ஸீட்ஸ் (Flax seeds).
* ஒமேகா-3 மற்றும் நார்ச்சத்துக்களுடன், குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடிய ஜெல் ஒன்றை உற்பத்தி செய்யக் கூடியது சியா ஸீட்ஸ் (Chia seeds).
* ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 போன்ற நல்ல கொழுப்பு அமிலங்களுடன் உடலுக்குத் தேவையான மொத்த புரோட்டீன் அளவையும், வைட்டமின், தாது உப்புக்களையும் தன்னுள் கொண்டிருக்கின்றன சணல் விதைகள் (Hemp seeds).
* உடல் நச்சுக்களைப் போக்கி, சக்தி அளிக்கக் கூடிய மக்னீசியம் மற்றும் வைட்டமின்-E ஆகியவற்றை அதிகளவில் கொண்டுள்ளது பைன் நட்ஸ் (Pine Nuts).
* நல்ல செரிமானத்திற்கும் இரத்த விருத்திக்கும் உதவக் கூடிய அதிக அளவு நார்ச்சத்துக்களையும் இரும்பு சத்துக்களும் கொண்டுள்ளது கச கசா விதைகள் (Poppy seeds).
* உடலுக்கு சக்தி அளிக்கக்கூடியதும், நோயெதிர்ப்பு சக்தி கொண்டதும், துத்தநாகம் மற்றும் மக்னீசியம் ஆகிய கனிமங்களை அதிகளவில் கொண்டுள்ளன பூசணி விதைகள்.
* உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செல்களைப் பாதுகாக்கவும் உதவக்கூடிய ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் வைட்டமின்-Cயை அதிகளவில் தன்னகத்தே கொண்டுள்ளது மாதுளை விதைகள்.
* நார்ச்சத்துக்கள், முக்கிய கொழுப்பு அமிலங்களுடன் புரோட்டீன் தேவையையும் முழுமையாக நிறைவேற்றித் தருகிறது குயினோவா (Quinoa).
* எலும்புகளை பலப்படுத்தும் கால்சியம், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் பாதுகாப்பளிக்கும் வைட்டமின்-E ஆகிய சத்துக்களைக் கொண்டுள்ள கருப்பு மற்றும் வெள்ளை எள்.
* ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் பாதுகாப்பளிக்கும் வைட்டமின்-E மற்றும் செல்களைப் பாதுகாக்கும் செலீனியம் ஆகியவற்றை அதிக அளவில் கொண்டுள்ள சூரியகாந்தி விதைகள்.
மேற்கண்ட பத்து வகையான விதைகளில் இருக்கும் நற்பயன்களைக் கருத்தில் கொண்டு அவற்றைத் தேவையான அளவு நம் உணவுடன் சேர்த்து உண்டு நலமுடன் வாழ்வோம்.