தயவுசெஞ்சு இவர்களெல்லாம் உருளைக்கிழங்கை அதிகம் சாப்பிடாதீர்கள்!

Potato
Potato

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று உருளைக்கிழங்கு. சிலர் தினமும் அதைக் கொடுத்தால் கூட சாப்பிடுவார்கள். உருளைக்கிழங்கில் அதிக சத்துக்கள் உள்ளது உண்மைதான். ஆனால் அந்த சத்துக்களே சிலருக்கு அபாயமாக மாறிவிடும். ஆகையால் யாரெல்லாம் உருளைக்கிழங்கை சாப்பிடக்கூடாது என்பதைப் பற்றி பார்ப்போம்.

பொதுவாக உருளைக்கிழங்கில் வைட்டமின் சி, பொட்டாசியம், கார்போஹைட்ரேட், புரதம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. உருளைக்கிழங்கில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் இதய நோயாளிகளுக்கு மற்றும் ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு மருந்தாகச் செயல்படும். அதுவும் உருளைக்கிழங்கின் தோலில் அளவுக்கு அதிகமானப் பொட்டாசியம் சத்துக்கள் உள்ளன. ஆனால் நாம் என்ன செய்வோம்? அதனை நீக்கிவிட்டுதான் சமைப்போம். ஆனால் இந்தத் தோல்கள் தான் உடலில் கொழுப்புகள் சேராமல் தடுக்கிறது.

அதேபோல் உருளைக்கிழங்கு புண்களையும் ஆற்றும். அதாவது வயிற்றுப்புண், வாய்ப்புண், வயிறு தொடர்பான கோளாறுகளை நீக்கும். மேலும் இதனால் அசுத்தநீர் தங்காமல் வெளியேறிவிடுகிறது.

உருளைக்கிழங்கில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் கூட சிலர் அதனை அதிகமாக எடுத்துக்கொள்ளுதல் கூடாது. உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் நேரடியாக எந்த பாதிப்பும் ஏற்படாது என ஒரு ஆய்வில் கண்டறியபட்டது. மேலும் 2ம் நிலை நீரழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 24 சதவீத அளவு குறைவாகவுள்ளதாகவும்l, கெடுதல் விளைவிக்கும் கொழுப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 26 சதவீத அளவு குறைவாக இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு நாளைக்கு 4 அல்லது அதற்குமேல் ஒன்றிரண்டுகள் அதிகம் சாப்பிடுவதால் எந்த நோயும் ஏற்படாதாம்.

இருந்தாலும், சர்க்கரை நோயாளிகள்  மிகவும் குறைவான அளவே உருளைக்கிழங்கை எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் உருளைக்கிழங்கில் உள்ள கார்போஹைட்ரேட் கீழ்வாதத்தின் வலிகளை அதிகரிக்கச் செய்யுமாம். ஆகையால் கீழ்வாத நோய் உள்ளவர்களும் உருளைக்கிழங்கை அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது. உருளைக்கிழங்கை அதிகம் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் அதிகமாகிவிடும்.

இதையும் படியுங்கள்:
வெயில் வெப்பத்தால் உதடுகள் உலர்ந்து போவதை தடுக்கும் லிப் பாம்கள்!
Potato

மேலும் உருளைக்கிழங்கை அதிகம் எடுத்துக்கொள்வதால் உடலில் கலோரிஸ் அதிகமாகி உடல் பருமன் ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது. ஆகையால் இந்த நோய்கள் உடையவர்களும் உடம்பைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் உருளைக்கிழங்கைத் தவிர்த்துவிடுவது நல்லது. அல்லது மருத்துவரின் ஆலோசனை பேரில் போதுமான அளவு எடுத்துக்கொள்ளலாம்.

முளைவிட்ட உருளைக்கிழங்குகள் மற்றும் பச்சையான உருளைக்கிழங்குகளில் விஷத்தன்மை ( முழு சத்தும் அப்படியே இருக்கும்) நிறைந்திருக்கும். ஆகையால் அவற்றை குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் என அனைவருமே தவிர்த்துவிடுவது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com