வயிற்றுப் புண்ணை சாதாரணமா நினைக்காதீங்க ப்ளீஸ்… குடல் என்ன ஆகும் தெரியுமா? 

Ulcer
Ulcer
Published on

சாப்பிட்டாலும் வயிறு வலி, சாப்பிடாமல் பட்டினி கிடந்தாலும் வயிறு வலி என வயிற்றுப் புண் பலரை பாடாய் படுத்தி எடுக்கிறது. வயிற்றுப் புண் என்பது சாதாரணமாக வயிற்றின் உள் சுவரில் ஏற்படும் ஒரு காயம் அல்லது புண். ஆனால், இது தரும் வேதனை சொல்லி மாளாது. இந்த வயிற்றுப் புண் ஏன் வருகிறது, அதற்கான அறிகுறிகள் என்ன, எப்படி சரி செய்வது என்பதைப் பற்றி கொஞ்சம் விரிவாக இந்தப் பதிவில் பார்க்கலாம். 

வயிற்றுப் புண்ணோட முக்கியமான அறிகுறியே வயிற்று வலிதான். வயிற்று வலி எங்கே வரும்னு கேட்டா, சரியா சொல்ல முடியாது. ஆனா, வயிற்றோட மேல் பகுதின்னு சொல்லலாம். சில பேருக்கு ராத்திரி நேரம் வலி அதிகமாக இருக்கும்னு சொல்றாங்க. நெஞ்செரிச்சல் கூட ஒரு அறிகுறி தான். சில நேரங்கள்ல சாப்பிட்ட பிறகு நெஞ்சுக்குள்ள நெருப்பு கொட்டுன மாதிரி எரியும். வாந்தி, குமட்டல் கூட வரலாம். 

சாப்பாடு சரியா செரிக்காம வயிறு உப்புசமாக இருப்பது, மலச்சிக்கல் ஏற்படுவது, இதெல்லாம் கூட வயிற்றுப் புண்ணோட அறிகுறிகளா இருக்கலாம். சில பேருக்கு பசிக்கவே பசிக்காது, அதனால உடல் எடை குறைய ஆரம்பிச்சுடும். புண் ரொம்ப தீவிரமாகிடுச்சுன்னா, ரத்த வாந்தி அல்லது மலம் கருப்பு கலர்ல போகும். இது ரொம்ப சீரியஸான அறிகுறி, உடனே மருத்துவரை பார்க்கணும்.

இந்த வயிற்றுப் புண் வருவதற்கு முக்கிய காரணம் ஹெலிகோபேக்டர் பைலோரி பாக்டீரியா தொற்று. இந்த கிருமி நம்ம வயிற்றோட பாதுகாப்பு சுவரை டேமேஜ் பண்ணிடும். அப்புறம், வலி நிவாரணி மாத்திரைன்னு அடிக்கடி எடுத்துக்கிட்டே இருந்தா கூட வயிற்றுப் புண் வர வாய்ப்பு இருக்கு. சில பேருக்கு இயற்கையாவே வயித்துல அமிலம் அதிகமா சுரக்கும். அதுவும் புண்ணை உண்டாக்கும். புகை பிடிக்கிறது, மது அருந்துவது இதெல்லாம் கூட வயிற்றுப் புண்ணுக்கு invitation கொடுக்குற மாதிரிதான். 

வயிற்றுப் புண்ணை சரி செய்ய இயற்கை வைத்தியம்னு பாத்தா, தேன் ரொம்ப நல்லது. அது பாக்டீரியாவை எதிர்த்து போராடும். முந்திரி பால் வயிற்றுப் புண்ணை ஆற்றும்னு சொல்றாங்க. கற்றாழை ஜெல் கூட புண்ணுக்கு இதமா இருக்கும். ஆனா, முக்கியமா ஒன்னு சொல்றேன். வயிற்றுப் புண் அறிகுறிகள் தீவிரமாக இருந்தா, உடனே மருத்துவரை பாருங்க. சில நேரம் ஆபரேஷன் கூட பண்ண வேண்டி வரலாம். 

இதையும் படியுங்கள்:
குடல் புண் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்!
Ulcer

வயிற்றுப் புண்ணை அலட்சியப்படுத்தினா, ரத்தப்போக்கு, குடல்ல ஓட்டை விழுகுறது மாதிரி ரொம்ப சீரியஸான பிரச்சனைகள் வரலாம். அதனால, அறிகுறிகள் தெரிஞ்ச உடனே டாக்டர்கிட்ட போயி ஆலோசனை கேளுங்க. சரியான சிகிச்சை எடுத்தா, வயிற்றுப் புண் தொல்லை இல்லாம சந்தோஷமா வாழலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com