ஏழைகளின் ஆப்பிள் நெல்லிக்காய்!

ஏழைகளின் ஆப்பிள் நெல்லிக்காய்!

‘ஒரு நாளில் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்லவேண்டியதில்லை’ என்பார்கள். ஆம், அது உண்மைதான். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடலில் பிரச்னையே வராது என்பதுதான் இதன் உள் அர்த்தமாகும். ஆனால், ஆப்பிள் என்பது எல்லோராலும் வாங்கிச் சாப்பிட முடியாது. ஏனெனில், அதன் விலை அதிகம். ஓரளவு வசதியானவர்களே அதை வாங்கிச் சாப்பிட முடியும். ஒருவகையில் பார்த்தால் அது ஏழைகளுக்கு எட்டாக்கனி. ஏழைகள் என்றாவது ஒருநாள் ஆப்பிள் வாங்கி சாப்பிடலாமே தவிர,  தினமும் அதை வாங்கிச் சாப்பிடுவது இயலாத காரியமாகும்.

ஆப்பிளை விட குறைந்த விலையில் ஆனால், அதே சத்துக்களுடன் ஒரு பழம் கிடைத்தால் அதை வாங்கிச் சாப்பிடுவதில் என்ன கஷ்டம்? அந்தப் பழம்தான் முழு நெல்லிக்காய். இதில் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து, புரதம் என பல சத்துக்கள் உள்ளன. ஒரு நெல்லிக்காயில் 600 மில்லி அளவு வைட்டமின் சி சத்து உள்ளதாம்.

நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வல்லமை படைத்தது. இதை தினமும் சாப்பிட்டு வந்தால் நோய்கள்  உங்களை நெருங்கவே நெருங்காது. இதில் இரும்புச் சத்தும் உள்ளதால் இரத்த சோகை நோய் உள்ளவர்கள் நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரித்து இரத்தசோகையை விரட்டிவிடும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டால் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும். மலச்சிக்கலை போக்கும் மாமருந்து நெல்லிக்காய். கண்களுக்கும் இதயத்துக்கும் நல்லது. உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை கரைக்கும் தன்மை நெல்லிக்காய்க்கு உண்டு. இரத்த அழுத்தம் உள்ளவர்கள், தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். இரத்த நாளங்களை சுத்தமாக வைத்திருப்பதோடு, கல்லீரல் பாதிப்பையும் தடுக்கிறது. நெல்லிக்காய் சாறில் சிறிது தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா நோய் குணமாகும். அதுமட்டுமல்ல, அல்சரை பிரச்னையையும் கட்டுப்படுத்தும் சக்தி நெல்லிக்காய்க்கு உண்டு.

நெல்லிக்காயை பச்சையாகவும் சாப்பிடலாம். இரத்த அழுத்தம் உள்ளவர்கள் நெல்லிக்காயை அதிகம் சாப்பிடாமல் தவிர்ப்பது நலம். நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் தலைமுடி நன்றாக வளரும் என்று கூறப்படுகிறது. முடியை செழுமையாக வளர வைக்கும் சக்தி நெல்லிக்காய்க்கு உண்டு என்கின்றனர் மருத்துவர்கள். நீண்ட ஆயுட்காலத்தைத் தரும் வல்லமை நெல்லிக்காய்க்கு உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com