குழந்தைகள் பொம்மைகளைக் கட்டிப்பிடித்து தூங்குவது சகஜமான ஒன்றுதான். இன்னும் சில குழந்தைகள் பொம்மை இல்லை என்றால், தூங்குவதற்கே அடம் பிடிக்கும். ஆனால், இதுபோன்ற மிருதுவான பொம்மைகளை குழந்தைகள் அருகில் வைத்துக்கொண்டு தூங்குவது சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
குழந்தைகள் பொம்மைகளை அருகில் வைத்துக்கொண்டு தூங்கும்போது Rhinitis, தும்மல், இருமல், சளி மற்றும் வேறு சில அழற்சி பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலும், இதுபோன்ற பொம்மைகளில் Lead, cadmium போன்ற ரசாயனங்கள் அதிக அளவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுபோன்ற சுவாசப் பிரச்னை குழந்தைகளுக்கு வர அதிகக் காரணம் ஜீன்ஸ், வளர்ப்புப் பிராணிகள், சிகரெட், Dust mites ஆகியவையாகும்.
மூன்று முதல் பதினைந்து வயதுக்குள் இருக்கும் குழந்தைகளையே இது அதிகம் பாதிக்கிறது. சிறு குழந்தைகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கும் டெடிபியர் பொம்மைகளால் rhinitis போன்ற அழற்சி பிரச்னைகள் வருவதோடு மட்டுமில்லாமல், இது ஆஸ்துமா பிரச்னை வருவதற்கும் வழிவகுக்கும்.
Dust mites இதுபோன்ற பொம்மைகளில் ஒட்டிக்கொண்டு இருப்பதால், இந்த பொம்மைகள் அதிகம் பயன்படுத்தும் குழந்தைகளின் அருகிலேயே இருப்பதால் சுலபமாக அவர்களை பாதித்து விடுகிறது.
இதில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க, பொம்மைகளை சுடு தண்ணீரில் அலசி வெயிலில் காய வைக்க வேண்டும். அதிகம் பயன்படுத்தப்படாத பொம்மைகளை பாதுகாப்பாக எடுத்து வைப்பது நல்லது.
இதுபோன்ற நோய்கள் குழந்தைகளைத் தாக்காமல் இருக்க, தாய்மார்கள் குழந்தைகளுக்கு முதல் 3 மாதங்கள் தாய்ப்பால் கொடுப்பது Rhinitis போன்ற பிரச்னைகள் வராமல் பாதுகாக்கிறது. குழந்தைகளுக்கு அருகில் புகைப்பிடிப்பதை தவிர்ப்பது நல்லது. வீட்டில் உள்ள பெட் ஷீட், தலையணை உறை போன்றவற்றை தவறாது துவைத்து நன்றாகக் காய வைத்து பயன்படுத்த வேண்டியது அவசியமாகும். வீட்டில் காற்றை சுத்தப்படுத்தும் செடிகளை வைப்பது நல்ல தூய்மையான காற்றை குழந்தைகள் சுவாசிக்க வழிவகுக்கிறது. இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி குழந்தைகளை நோய்களிடம் இருந்து பாதுகாப்பது அவசியமாகும்.